தினகரனின் எம்.பி. பதவி செல்லாது என கோரி உயர் நீதிமன்றத்தில் சுவாமி வழக்கு
சென்னை:
பெரியகுளம் எம்.பியான தினகரனின் பதவி செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரி ஜனதா கட்சியின்தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வழக்குதொடர்ந்தார்.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தானே நேரில் வந்து தாக்கல் செய்த மனுவில் சுவாமி கூறியுள்ளதாவது:
சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள தினகரன், சென்னை-மயிலாப்பூரில் உள்ள வாக்காளர் பட்டியலில் தன் பெயரைச்சேர்த்துள்ளார்.
இந்நிலையில் அவர் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதால் தினகரன் மக்களவையில் அமருவதற்குத் தகுதியற்றவர்.
எனவே தினகரனின் எம்.பி. பதவி செல்லாது என அறிவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சுவாமிதன் மனுவில் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர் இந்த வழக்கைஇன்று விசாரித்தனர்.
பின்னர், இது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு நடைபெற்று வருவதால் இவ்வழக்கின் விசாரணையை மார்ச் 14ம்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications