நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பதில் மனு செய்ய கருணாநிதிக்கு உத்தரவு
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்றஅவமதிப்பு வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு மேலும் ஒரு வாரகால அவகாசம் அளித்துள்ளது.
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம்விடுதலை செய்ததை விமர்சித்து தன்னுடைய பத்திரிக்கையில் கருணாநிதி கட்டுரைகளையும் கார்ட்டூன்களையும்வெளியிட்டிருந்தார்.
கருணாநிதியின் கருத்துக்களும் கார்ட்டூன்களும் நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது என்று கூறி தமிழக அரசுசார்பில் அரசு வழக்கறிஞரான என்.ஆர். சந்திரன் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக 3 வாரத்திற்குள் கருணாநிதி பதில் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த 3 வாரம் முடிவடைந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பதில் மனு தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கருணாநிதி தரப்பில் கோரப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு கருணாநிதிக்கு மேலும் ஒரு வார காலஅவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சும் ஆகியோர்உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications