வைகை கூட்டு நதிநீர் திட்டம்: ஜெ. வாக்குறுதி
தேனி:
ரூ.98 கோடி செலவில் சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு ஆண்டிப்பட்டி மற்றும் 28கிராமங்களுக்கு வைகையில் இருந்து குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தின் 2 வது நாளானவியாழக்கிழமை குன்னூரில் பிரச்சாரத்தை துவக்கினார்.
பிறகு திருமலாபுரம், ஒக்கரைப்பட்டி, கொத்தப்பட்டி, அழகாபுரி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம்செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இந்த தொகுதி முன்னேற்றத்திற்கு எம்.ஜி.ஆர். பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். எம்.ஜி.ஆர். விட்டுச் சென்ற பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
ரூ.98 கோடி செலவில் சேடப்பட்டி கூட்டு நதிநீர் திட்டம் மூலம் ஆண்டிப்பட்டி மற்றும் 28 கிராமங்களுக்கு குடிநீர்வசதி செய்து தரப்படும். அதிகாரிகுளம் கண்மாய் திட்டம் நிறைவேற்றப்படும்.
தெப்பம்பட்டி அணைத் திட்டத்துக்கு ரூ.11.20 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில்துவங்கப்படும்.துரைசாமிபுரம், கோவில்பட்டி கண்மாய் வாய்க்கால் தூர்வாரப்படும்.
எம்.ஜி.ஆரைப் போல என்னையும் உங்கள் வீட்டுப் பிள்ளையா, குடும்பத்தில் ஒரு அங்கமாக, சகோதரியாகநினைத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ஜெயலலிதா கூறினார்.
பிரச்சார இடங்களுக்கு தகுந்தாற் போல் நேற்று தனது பேச்சில் சில மாற்றங்களை செய்து ஜெயலலிதா பேசினார்.நேற்று ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது போலீசாரின் கெடுபிடி மேலும் குறைந்திருந்தது.
பிரச்சாரம் செய்த இடங்களைத் தாண்டிய பிறகும் யாராவது கை காட்டினால் வேனை நிறுத்தி என்ன,ஏது என்றுகேட்கிறார். அவர்கள் மனுக் கொடுத்தாலும் அவரே வாங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications