ஜம்முவில் ஊடுருவ முயன்ற 8 தீவிரவாதிகள் கொலை
ஜம்மு:
ஜம்மு அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள ரஜவுரி மாவட்டத்தில் உள்ள மென்தார் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 8பாகிஸ்தான் தீவிரவாதிகள் ரகசியமாக ஊடுருவ முயன்றனர்.
ஆனால் அந்த 8 தீவிரவாதிகளையும் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இவர்களின் அடையாளம் பற்றிஇதுவரை எதுவும் தெரியவில்லை.
இதற்கிடையில் நேற்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதியா கிராமத்தில் உள்ள முகமது டாசிம் என்பவரின்வீட்டுக்குள் திடீரென்று புகுந்த தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்றனர்.
இதேபோல் ஆர்னாஸ் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு, உதாம்பூரில் உள்ள கிராம பாதுகாப்பு கமிட்டியின்உறுப்பினர் ஆன்கிரஸ் சிங் என்பவர் படுகாயமடைந்தார்.
இதற்கிடையே ரஜவுரி மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் பகுதியில் மறைந்துள்ள தீவிரவாதி ஒருவனை தேடும் பணியில்பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த முக்கியஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் அந்த இடத்திலிருந்து ஏராளமான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு:
இந்நிலையில் ஜம்முவில் உள்ள ஜபோவால் பகுதி அருகில் சர்வதேச எல்லைப்பகுதியில் உள்ள கிராம வயல்களில்வேலை செய்து கொண்டிருந்த மக்களை நோக்கி நேற்று (வியாழக்கிழமை) திடீரென்று பாகிஸ்தான் ராணுவத்தினர்சரமாரியாக சுட்டனர்.
இந்த தாக்குதலில் சந்து ராம் (70) என்பவரின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இவரை உடனடியாக மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் அவரது உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹிரன்நகர், ஆர்.எஸ்.புரா, சம்பா மற்றும் அக்னூர் பகுதிகளில் சர்வதேச எல்லை அருகே சிறியஅளவில் இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையில் நேற்று இரவிலிருந்துதொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications