வந்தது மத்திய ரிசர்வ் போலீஸ் படை
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 1,500 மத்திய ரிசர்வ் போலீசார் தமிழகம் வந்தனர்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருகின்ற 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நேர்மையாகவும்,அமைதியாகவும் நடக்க மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று திமுகஉட்பட பல எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு கடிதங்கள் எழுதியிருந்தன.
எனவே தேர்தல் கமிஷனின் ஆணையின்படி, ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், பினாங்கினி எக்ஸ்பிரஸ் மூலம் மத்தியரிசர்வ் போலீசார் 1,500 பேர், நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்துசேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்படுவர். பிறகு அங்கிருந்து விசேஷபஸ்கள் மூலம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு செல்கின்றனர். பிறகு அவர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரைஅங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.


Click it and Unblock the Notifications
