தீவிரவாதிகளை ஒப்படைக்க முடியாது: பாகிஸ்தான் திமிர்
துபாய்:
இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை ஒப்படைக்க முடியாது என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர்அப்துல் சத்தார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
எல்லையில் இருந்து இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டுமானால் பாகிஸ்தான் 20 தீவிரவாதிகளைஒப்படைக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் பட்டியலை இந்தியா, பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.
அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நாடுகள் வற்புறத்தியும் அவர்களை ஒப்படைப்பதில் பாகிஸ்தான் தாமதப்படுத்திவந்தது. இந்நிலையில் இன்று துபாய்க்கு சென்றுள்ள அப்துல் சத்தார் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்கூறியதாவது:
இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்கியதற்கும், இந்த 20 தீவிரவாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால்அவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்காது.
இந்த 20 தீவிரவாதிகள் குறித்து பாகிஸ்தானும், பிற நாடுகளும் ஆய்வு செய்தது. அதில் இந்த தீவிரவாதிகள் 20ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே இவர்களை ஒப்படைக்க வேண்டுமானால் அந்த பட்டியலை சார்க் கூட்டமைப்பிடம் கொடுத்து முறையாகஅவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டும்.
அதன் பிறகு சார்க் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று அப்துல் சத்தார் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications