பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டது பா.ஜ.க: சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

இந்திய பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்து விட்டு என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ்ஜனநாயக பேரவையின் தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்து விட்டது. இந்த வருடத்தில் பொருளாதாரம் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது குறித்து ஜனநாயக கூட்டணியில் உள்ள திமுக, மதிமுக, பாமக கட்சிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள்மவுனமாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பவரிடையே இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த விவகாரம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, அனைத்து கட்சிகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்புவரும் வரை காத்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை, காங்கிரஸில் இணைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் மாணவர் அணியை உருவாக்கும் விழா மதுரையில் மார்ச் மாதம் 10ம் தேதிநடைபெற உள்ளது என்று சிதம்பரம் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+