தர்மபுரி அருகே லாரி-கார் மோதல்: 3 பேர் பலி
தர்மபுரி:
தர்மபுரி அருகே காருடன் மினி லாரி மோதியதில் 3 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வர்ணதீர்த்தம் கிராமத்தைச் சேர்நத ஓவியர் பூபதி (21). இவருடன் அரூரைச்சேர்ந்த மீரா மீனாட்சி (20), கணேசன் (21), பழனி (22), சேடு (25) ஆகியோர் புதுப்பட்டியில் உள்ள நண்பரின்திருமணத்திற்கு செல்வதற்காக சனிக்கிழமை இரவு காரில் சென்றனர்.
காரை சேடு ஓட்டிச் சென்றார். அப்போது புதுப்பட்டி அருகே எதிரே வந்த மினி லாரி கார் மீது பலமாக மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே பூபதி, சேடு ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் பழனி இறந்தார்.
படுகாயம் அடைந்த மீனாட்சி, கணேசன் ஆகியோர் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகே பஸ்-வேன் மோதி 2 பேர் பலி:
இதற்கிடையே களக்காடு அருகே பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஒருஅரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ் களக்காடு அருகே வந்த போது எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர்மோதியது.
இந்த விபத்தில் வேன் நொறுங்கியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜேந்திரன், லோடுமேன் பால்ராஜ்ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணமடைந்தனர்.
வேனில் பயணம் செய்த மற்ற 9 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டைமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications