போலீஸ் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த அரசு ஊழியர் கைது
சென்னை:
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோரிடம்பணம் வாங்கி மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகே முத்தாப்புதுப்பேட்டையில் உள்ள மிட்டனமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (42). இவர்சென்னை திருமங்கலத்தில் உள்ள மத்திய அரசு பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பில் பம்ப்ஆபரேட்டராகப் பணி புரிகிறார்.
தன்னால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வாங்கித் தர முடியும் என பட்டாபிராம், முத்தாப்புதுப்பேட்டை,மிட்டனமல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் கூறி ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை எழுமலைமுன் பணமாக பெற்றுள்ளார்.
ஆனால் பல மாதங்களாகியும் போலீஸ் வேலை வாங்கித் தராததால் பாதிக்கப்பட்டவர்கள் எழுமலையிடம்பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அதற்கு ஏழுமலை மத்திய போலீஸ் பணி நியமனத்துக்கான போலி உத்தரவுகளைஅவர்களிடம் கொடுத்துள்ளார்.
இதை நம்பிப் பெற்றுக் கொண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் அலுவலகத்தில் இந்த உத்தரவுகளை அவர்கள் கொடுத்தபோதுதான் அது போலியானது என்று அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.
இதனால் ஏமாந்தவர்கள் பட்டாபிராம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தியபோது, சென்னை மட்டுமின்றி திருவண்ணாமலை, திருச்சி, கடலூர், தேனி போன்ற பல்வேறுமாவட்டங்களிலும் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எழுமலை மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகம்வந்துள்ளது.
ஏழுமலையை கைது செய்த போலீசார் திருவள்ளூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில்அடைத்தனர். இவர் மீது 9 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். இவர்கள் ரூ.2.5 லட்சம் வரை பணத்தைப்பறிகொடுத்துள்ளனர்.
இது தவிர வேறு மாவட்டங்களில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும்,இந்த மோசடிக்கு பின்னணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் அல்லது வேறு முக்கிய நபர்கள்உள்ளனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications