நாடாளுமன்றத் தாக்குதலிலும் ஷேக் ஒமருக்கு தொடர்பு
இஸ்லாமாபாத்:
கராச்சியில் அமெரிக்க நிருபரான டேனியல் பேர்ல் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஷேக் ஒமர்,இந்திய நாடாளுமன்றத் தாக்குதலிலும் கொல்கத்தா அமெரிக்க மையத் தாக்குதலிலும் தனக்குத் தொடர்புஉள்ளதாகக் கூறியுள்ளான்.
ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற தீவிரவாத அமைப்பை மெளலானா மசூத் அசாருடன் உருவாக்கிய ஷேக் ஒமர், இந்தியஎம்.பிக்களைப் பணயக் கைதிகளாக வைத்து அங்குள்ள சிறைகளில் உள்ள தீவிரவாதிகள் அனைவரையும்விடுதலை செய்யவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாடாளுமன்றத்தைத் தாக்கத் திட்டமிட்டதாகவும்ஒமர் கூறியுள்ளான்.
டேனியல் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் போலீசாரின் காவலில் உள்ள ஷேக் ஒமர்,இத்தகைய வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பாகிஸ்தானில் வெளியாகும் "தி நியூஸ்" என்ற ஆங்கில நாளிதழில்கூறப்பட்டுள்ளது.
சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனுடனும் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத் தாக்குதல்தொடர்பாக துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்ட அப்தாப் அன்சாரியுடனும் தனக்குநெருங்கிய தொடர்பு உண்டு என்றும் ஷேக் ஒமர் கூறியுள்ளான்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11ல் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ளஜலாலாபாத்துக்குச் சென்று பின் லேடனை நேரடியாகவே 2 முறை தான் சந்தித்ததாகவும் ஷேக் ஒமர் தன்னுடையவாக்குமூலத்தில் கூறியுள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் கார் குண்டு மூலம் தற்கொலைத்தாக்குதலை நடத்தியவன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்தான் என்றும் ஷேக் ஒமர் தெரிவித்துள்ளான்.
கராச்சியில் கடந்த ஜனவரி 23ம் தேதி கடத்தப்பட்ட டேனியல், அடுத்த சில நாட்களிலேயே கடத்தல்காரர்களால்சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாகவும் போலீசாரிடம் ஷேக் ஒமர் தெரிவித்துள்ளான். ஆனால் போலீசார் இதை நம்பமறுத்துவிட்டனர்.
பாக். மறுப்பு:
இதற்கிடையே இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் தனக்கும் பங்குள்ளதாக ஷேக் ஒமர் வாக்குமூலம் அளித்துள்ளதகவல் தவறானது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இந்தச் செய்தி வெளியாகியுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறைசெய்தித் தொடர்பாளரான ஆசிஸ் அகமது கான் நிருபர்களிடம் கூறினார்.
ஷேக் ஒமரை விசாரிக்க விரும்பும் அமெரிக்கா:
இந்நிலையில் பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஷேக் ஒமரை விசாரிக்க விரும்புவதாகஅமெரிக்கா தெரிவித்துள்ளது.
விரைவில் ஷேக் ஒமரை அமெரிக்க போலீசார் விசாரிப்பார்கள் என்றும் தெரிகிறது.
மேலும் ஷேக் ஒமர் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்பதால், இங்கிலாந்து போலீசாரும் அவனைவிசாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தாக்குதல் நடத்த விரும்பும் தீவிரவாதி:
இதற்கிடையே டேனியல் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஒரு தீவிரவாதி, இந்தியாவில்தற்கொலைத் தாக்குதல் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
"விசாரணையின் முடிவில் எனக்கு எப்படியும் மரண தண்டனை கொடுப்பீர்கள். அதற்குப் பதிலாக காஷ்மீர் அல்லதுஇந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் என்னைத் தற்கொலைத் தாக்குதல் நடத்த அனுமதியுங்கள்" என்று திமிருடன்கோரியுள்ளதாகத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications