ஆண்டிப்பட்டி: ஜெ.க்கு ஆதரவாக தங்கபாலு பேச்சு
ஒசூர்:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க காங்கிரஸுக்கு தார்மீக அடிப்படையில்பொறுப்புள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் ஒசூரில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட தங்கபாலுநிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 1982ம் ஆண்டு காங்கிரஸ் தலைவியாக இந்திரா காந்தி இருந்தபோது தமிழகத்தில் எம்.ஜி.ஆருடன் சுமூகஉறவு வைத்திருந்தார். ராஜீவ்காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தபோது கொள்கைகள் சரியில்லாததால் கூட்டணியை விட்டு விலகிகாங்கிரஸுக்கு அதிமுக ஆதரவளித்தது. எனவே அதிமுகவிற்கு ஆதரவளிக்க காங்கிரஸுக்கு தார்மீகஅடிப்படையில் பொறுப்பு உள்ளது.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக காங்கிரஸ் மேலிடம் இது வரைஅறிவிக்கவில்லை.
அதிமுகவுடன் கூட்டணி குறித்து சோனியாவிடம் 15 பேர் கொண்ட குழு விளக்கியது. இதில் 14 பேர் அதிமுகவுடன்உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால் காங்கிரஸ் தலைவரான இளங்கோவன் மட்டும் உறவு தொடரக் கூடாது எனத் தெரிவித்தார். அவர்யாரையும் அரவணைத்துச் செயல்படுவதில்லை. தன்னிச்சையாகத்தான் செயல்படுகிறார் என்று தங்கபாலு கூறினார்.
ஜெயலலிதாவை ஆதரித்துப் பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகரான கே. பார்த்தசாரதிநேற்றுதான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications