வீரப்பனின் மாமனார், மைத்துனரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை
மேட்டூர்:
சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மாமனார், மைத்துனரிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவரை விடுவிக்க தமிழக, கர்நாடக அரசுகள் வீரப்பனுக்குபணம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளி சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோரின் உறவினர்கள்வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தி அவர்களிடமிருந்து 500 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
காட்டில் உள்ள வீரப்பன் தன் உறவினர்களுக்கு இந்த பணத்தை கொடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாகவீரப்பன், மற்றும் சேத்துக்குளியின் உறவினர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.30லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பென்னாகரம் அருகே உள்ள நெருப்பூருக்கு கர்நாடக அதிரடிப்படை போலீசார் சென்றனர். அவர்கள்வீரப்பனின் மாமனார் பூசாரி (60), மைத்துனர் செங்கோடன் ஆகியோரை கைது செய்து கூட்டிச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை கர்நாடக மாநிலத்தில் ரகசிய இடத்தில் வைத்து அதிரடிப்படையினர் விசாரித்துவருகின்றனர்.
இதற்கிடையே மாதேஸ்வரன் மலையில் உள்ள காட்டுப் பகுதியில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் கொஞ்சி கல்லுகொடு என்ற பகுதியில் 4 பேர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடமாடி உள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் கெம்பையா தலைமையில் அதிரடிப் போலீசார் அந்த பகுதியில்முற்றுகையிட்டு, வீரப்பனை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications