பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த 2 இந்து முன்னணியினர் கைது
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில் பிள்ளையார் சிலையை உடைத்த வழக்கில் இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார்கைது செய்தனர்.
சத்தியமங்கலத்தில் உள்ள சதுமுகையில் சில தினங்களுக்கு முன்பு பிள்ளையார் கோவிலில் உள்ள பிள்ளையார்சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டும்அவமதிக்கப்பட்டன.
இந்தச் செயலை செய்தவர்களை உடனே கைது செய்யுமாறு அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசில் தனிப்படை அமைக்கப்பட்டு ரகசியமாக விசாரணைநடத்தப்பட்டது.
சதுமுகையைச் சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் பேரில் சதுமுகையில் நெசவுத் தொழில் செய்து வரும் மஞ்சுநாதன்(17) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் மஞ்சுநாதன் கூறியதாவது:
நான் இந்து முன்னணி தீவிர உறுப்பினர். அடுத்த மாதம் 4ம் தேதி சதுமுகையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டம்நடப்பது எனக்கு தெரிய வந்தது.
இதை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி ஒன்றிய இணை அமைப்பாளர்செல்வக்குமாரிடம் ஆலோசனை கேட்டேன்.
அவர் தான் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு குழப்பத்தை ஏற்படுத்தினால் கூட்டத்துக்குத் தடைபோட்டு விடுவார்கள் எனக் கூறினார். அதனால் தான் அப்படி செய்தேன் என்று மஞ்சுநாதன் போலீசிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து செல்வக்குமாரையும், மஞ்சுநாதனையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை கோயம்புத்தூர் சிறையில் மார்ச் 1ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருவரும் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்:
இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்கு பெரியார் திராவிடர் கழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளன.
கடவுளின் பெயரால் வகுப்புக் கலவரத்தை உருவாக்க முயலும் இந்து முன்னணியைத் தடை செய்ய வேண்டும்என்று பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியுள்ளார்.
சுவாமி சிலைகளை உடைத்து, பிற மதத்தினர் மீதும் பிற இயக்கத்தினர் மீதும் பழி சுமத்தும் வேலையை இந்துமுன்னணி தொடர்ந்து செய்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கூறியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications