எல்லையில் படைகள் வாபஸ் இல்லை: பெர்னாண்டஸ்
டெல்லி:
மத்திய அரசின் நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றும் வரையில், எல்லையிலிருந்து படைகளை திரும்பபெறும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று ராணுவ பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்கூறினார்.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை தொடர்ந்து எல்லையில் இந்திய ராணுவத்தினர் எதற்கும் தயார் என்ற நிலையில்குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் நிறுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் போர் எதுவும் இல்லாததால், ராணுவ வீரர்கள்அலுப்படைந்து வருவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.
டெபெக்ஸ்போ-2002 தொடக்க விழாவில் கலந்து கொண்ட பெர்னாண்டஸ், இதற்கு பதிலளிக்கும் வகையில்நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய ராணுவம் எல்லையிலிருந்து திரும்புவதற்காக பாகிஸ்தானுக்கு சில நிபந்தனைகளை நாம் விதித்துள்ளோம்.அவற்றை அந்நாடு நிறைவேற்றும் வரையில் நம் ராணுவம் எல்லையிலேயே இருக்கும்.
ஆனால் எல்லையிலேயே நிறைய நாட்கள் தொடர்ந்து ராணுவப்படை இருப்பற்கோ அல்லது ராணுவத்தை திரும்பபெறுவதற்கோ நிறைய செலவுகள் ஆகும்.
நான் எல்லையிலிருக்கும் வீரர்களை அடிக்கடி சந்தித்து வருகிறேன். அவர்கள் தேசத்துக்காக எதுவும் செய்யும்வகையில் மன உறுதியோடு உள்ளனர்.
இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்பந்தம் செய்த படி, இரு நாட்டு முப்படைகளும் கூட்டாக பயிற்சி மேற்கொள்ளும்.அமெரிக்கா நமக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது என்று பெர்னாண்டஸ் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications