குடிகார கணவனை தீவைத்துக் கொன்ற பெண்
அம்பத்தூர்:
அம்பத்தூர் அருகே தினசரி குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்திய கணவரை ஒரு பெண் தீ வைத்து எரித்துக்கொன்றார்.
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் அப்பள வியாபாரி லட்சுமணன். இவரது மனைவி உமா.இவர்களுக்கு பாலாஜி, கவிதா என்ற குழந்தைகள் உள்ளனர்.
லட்சுமணனுக்குக் குடிப்பழக்கம் உண்டு. தினசரி குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவது வழக்கம். குடிபோதையில்மனைவி, குழந்தைகளை அடிப்பதும் அவரது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம் போல கடந்த 15ம் தேதியும் லட்சுமணன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.குடிப்பதற்குப் பணம் கேட்டு உமாவை அடித்துள்ளார்.
இந்தச் சமயத்தில் உமாவின் அக்கா செல்வி அங்கு வந்துள்ளார். தங்கையை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.அப்போது செல்வியையும் லட்சுமணன் அடித்துள்ளார் என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வியும், உமாவும் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து லட்சுமணன் மீதுஊற்றினர். பின்னர் உமா தன் கணவனின் உடம்பில் தீவைத்தார்.
தீயில் கருகிய லட்சுமணன் உயிருக்குப் போராடினார். இந்தச் சமயத்தில் அங்கிருந்து உமாவும், செல்வியும் தப்பிவிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தோர் லட்சுமணனை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர்இறந்தார்.
இறப்பதற்கு ன் தனது மனைவி உமாவும், அவரது அக்கா செல்வியும் சேர்ந்தே தன்னை தீ வைத்து எரித்ததாகவாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து செல்வி மற்றும் உமாவை போலீசார் கைது செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications