ஜெயின் சாமியார் ஆன 16 வயது மாணவி
சென்னை:
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 16 வயது மாணவி உட்பட 2 பேர் ஜெயின் மத சாமியார் ஆனார்கள்.
இந்தியா முழுவதும் ஏராளமானவர்கள் ஜெயின் மதத்தை பின்பற்றுகின்றனர். இதன் ஸ்தாபகர் மகாவீரரின்கொள்கைகளையும், ஜெயின் மதத்தை பரப்புவதற்கும் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்சாமியார்களும், ஆண் சாமியார்களும் உள்ளனர்.
இவர்களுக்கெல்லாம் தலைமை சாமியாரான கமல்முனே கமலேஷ் சென்னை வந்து இருந்தார். இதையொட்டிஜெயின் மதத்தைச் சேர்ந்த 2 பெண்கள் சாமியார் ஆகும் நிகழ்ச்சி சென்னை குசல்தாஸ் கார்டனில் நடந்தது.
மத்தியபிரதேச மாநிலம் பிரகான்பூரை சேர்ந்த 16 வயதான 10வது வகுப்பு படிக்கும் மாணவியும், மராட்டியமாநிலம் பூஷாவல்லை சேர்ந்த 3 மகள்களுக்கு தாயான சிநேகலதாவும், ஜெயின் மத சாமியார்களானார்கள்.
இந்த 2 பெண்களும் சாமியார் ஆகும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ஜெயின் மத பெண்கள் கூடி இருந்தனர்.அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு 2 பெண்களையும் மணப்பெண்ணை அழைத்து வருவது போல் அழைத்துவந்தனர்.
பிறகு அவர்களை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்கள் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றிவிட்டு, வெள்ளைப் புடவை அணிவிக்கப்பட்டு மொட்டை அடித்தனர்.
பிறகு அவர்களை அதே மேடைக்கு அழைத்து வந்தனர். பிறகு அவர்கள் அணிந்திருந்த நகைகளை ஏலம் விடும்நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறகு விழாவில் பேசிய கமல் கமலேஷ் சாமியார், ஜெயின் சாமியார்கள் சென்னையில் தங்க ஆசிரமம் கட்டிகொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications