தமிழக காங்கிரசின் "குப்பைத் தொட்டி" அரசியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தனக்குக் கடிதம் அனுப்பினால் அதைக் குப்பைத் தொட்டியில்போடுவேன் என்று முன்னாள் தலைவரான கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.

அவ்வாறு தங்கபாலு செய்தால் அவர் போய்ச் சேரும் இடமே குப்பைத் தொட்டிதான் என்று இளங்கோவனும்பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரசில் 2 கோஷ்டிகள் உருவாகிவிட்டன.அதிமுகவை விட்டுப் பிரிந்தது மகா மகா தவறு என்று ஒரு கோஷ்டியும் அது சரிதான் என்று மற்றொரு கோஷ்டியும்கூறி வந்தன.

இதனால் அதிமுகவை ஆதரிக்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜெ. காங்கிரஸ்காரர்கள் என்றே அழைக்கப்பட்டுவந்தனர்.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று தமாகா, கம்யூனிஸ்ட்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு காங்கிரசும் அறிவித்து விட்டது.

இது ஜெ. காங்கிரஸ்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும்ஜெயலலிதாவை ஆதரித்தே தீருவது என்ற முடிவுக்கு இவர்கள் வந்து விட்டனர்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என்றும் இளங்கோவன்அறிவித்ததைக் கேட்டதும் ஜெ. காங்கிரஸ்காரர்கள் ஒரேயடியாகக் கொதித்துப் போய்விட்டனர்.

வாக்களிப்பது ஜனநாயக உரிமை. இதைத் தடுப்பதற்கு இளங்கோவனுக்கு என்ன அருகதை என்று கேட்டகாங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான கே. பார்த்தசாரதி சமீபத்தில் கட்சியை விட்டுநீக்கப்பட்டார். மேலும் ஜெயலலிதாவைத்தான் ஆதரிப்போம் என்றும் இவர் கறாராகக் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தங்கபாலுவும் ஜெயலலிதாவை ஆதரித்துப் பேசியதையடுத்து, இளங்கோவன்கடுங்கோபமடைந்தார். இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று தங்கபாலுவுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளதாகவும் இளங்கோவன் கூறினார்.

இதற்கிடையே இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் தங்கபாலு கூறியதாவது:

இளங்கோவன் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் இதுவரை எனக்கு எந்தவிதமானநோட்டீசும் வரவில்லை.

அப்படியே வந்தாலும் அதற்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றார் நான் அகில இந்தியகாங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர். தமிழக காங்கிரசால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.

எனக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரமும் தமிழக காங்கிரசுக்குக் கிடையாது. அவ்வாறு அங்கிருந்து ஏதாவதுநோட்டீஸ் வந்தால் அது குப்பைத் தொட்டிக்குத்தான் போகும்.

தமிழக காங்கிரசை இளங்கோவன் அதள பாதளம் தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார் என்று தங்கபாலுகூறினார்.

இதற்கும் இளங்கோவன் பதிலடி கொடுத்துப் பேசியுள்ளார். நாங்கள் அனுப்பும் நோட்டீசுக்குப் பதிலளிக்கவில்லைஎன்றால் தங்கபாலு போய்ச் சேருகிற இடம் குப்பைத் தொட்டிதான் என்று அவர் காட்டமாகக் கூறினார்.

பார்த்தசாரதி மற்றும் தங்கபாலுவுடன் ஜெ. காங்கிரஸ்காரர்கள் நின்றுவிடப் போவதில்லை. மீதமுள்ள ஜெ.காங்கிரஸ்காரர்களும் இளங்கோவனுக்கு எதிராகப் போர்க் கொடியை உயர்த்தத் தயாராகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+