எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு ஓட்டு: மின்னணு எந்திரம் ஏற்படுத்திய பரபரப்பு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் எந்த பட்டனைஅழுத்தினாலும் இரட்டை இலைக்கே ஓட்டு பதிவானது. இதையடுத்து திமுக, மதிமுக தொண்டர்கள் போராட்டம்நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராஜகோபாலன்பட்டி என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் காலையில் மக்கள் வாக்களிக்க வரிசையாய்நின்றிருந்தனர்.
சாவடி திறக்கப்பட்டவுடன் இங்கிருந்த மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் மக்கள் வாக்களித்தனர். அப்போதுஎந்த சின்னத்தை அழுத்தினாலும் இரட்டை இலைக்கே ஓட்டு பதிவானது. இதையடுத்து அதிர்ச்சியடைந்தவாக்காளர்கள் அங்கிருந்த திமுக, மதிமுக ஏஜெண்டுகளிடம் இதனைத் தெரிவித்தனர்.
இந்தத் தகவல் தெரியவந்தவுடன் மதிமுக தலைவர் வைகோ, புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர்கிருஷ்ணசாமி, திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் அந்த வாக்குச் சாவடிக்கு விரைந்தனர். அதற்குள் 71 பேர்அந்த எந்திரத்தில் வாக்களித்துவிட்டனர்.
அங்கு வந்த வைகோ அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்து புகார் கூறியவுடன் உடனடியாக அந்த எந்திரம்மாற்றப்பட்டது. மாற்று எந்திரத்தை வைத்து அதிகாரிகள் வாக்குப் பதிவை மீண்டும் தொடங்கினர். இந்தக்கோளாரினால் வாக்குப் பதிவு சுமார் ஒன்றரை மணி நேரம் தடைபட்டது.
ஆனால், ஏற்கனவே வாக்களித்த 71 பேருக்கும் மீண்டும் வாக்களிக்க அனுமதி தர வேண்டும் என வைகோகோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர்.
இதையடுத்து அதிகாரிகளைக் கண்டித்து அங்கேயே தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார் வைகோ. அவரைசமாதானப்படுத்த அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வைகோவுடன் திமுகவினரும் சேர்ந்துதர்ணாவில் இறங்கினர்.
இந்த 71 பேருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்க அனுமதி தர வேண்டும் இல்லாவிட்டால் இந்த வாக்குச் சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வைகோ கோரினார். இதை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் தனது தொண்டர்களுடன்சாலை மறியலில் ஈடுபட்டார்.
அவருடன் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் தனது தொண்டர்களுடன் வந்து சாலை மறியலில்ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வைகோவுடன் சமாதானப் பேச்சு நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை தொலைபேசியில்தொடர்பு கொணடு வைகோ பேசினார். இது குறித்து உடனடியாக புகார் அனுப்புமாறும், நடவடிக்கைஎடுப்பதாகவும் வைகோவிடம் அவர்கள் உறுதிமொழி அளித்தனர்.
இதையடுத்து அந்த 71 பேருக்கும் மீண்டும் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதன் பின்னர் தான் தனது சாலை மறியல் போராட்டத்தை வைகோ கைவிட்டார்.
இந்த மின்னணு எந்திரத்தில் அதிகாரிகளுடன் சேர்ந்து அதிமுகவினர் மோசடி செய்ததாக திமுக புகார் கூறியுள்ளது.இதனால் தான் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கே ஓட்டு பதிவானதாகவும் திமுகவினர் கூறினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications