3 முக்கிய சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐயின் 3 இணை இயக்குனர்களை மத்திய அரசு திடீரென இடமாற்றம்செய்துள்ளது.

இதில் 2 இயக்குனர்கள் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக விசாரித்து வரும்அதிகாரிகளாவர். இத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி சமீபத்தில் துபாயில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆப்தாப்அன்சாரியையும் இவர்கள் தான் விசாரித்து வந்தனர்.

எம்.எஸ்.பாலி, நீரஜ் குமார், ஜே.கே. தத்தா ஆகிய இந்த மூன்று அதிகாரிகளையும் மாற்ற வேண்டாம் என சி.பி.ஐ.மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது. அதே போல மத்திய விஜிலென்ஸ் கமிஷனும் இவர்களை மேலும் ஒருவருடத்துக்கு சி.பி.ஐயிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.

வழக்கமாக 7 வருடத்துக்கு மேல் சி.பி.ஐயில் இருக்க அதிகாரிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால்,இவர்கள் முக்கியமான வழக்குகளை விசாரித்து வந்ததாலும், இவர்களை மாற்றினால் விசாரணை தடைபடும்என்பதாலும் மேலும் ஓராண்டுக்கு இவர்களுக்கு சி.பி.ஐயிலேயே பணிபுரிய அனுமதி தர வேணடும் என சி.பி.ஐ.இயக்குனர் குழு கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், இதையெல்லாம் மீறி இவர்களை அரசு இடமாற்றம் செய்துள்ளது.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த அதிகாரிகள் நியமனம் தொடர்பான கேபினட் கமிட்டிக் கூட்டத்தில்இவர்களை இடமாற்றம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது.

இதில் எம்.எஸ்.பாலி உத்தரப் பிரதேசம் கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி. 1976ம் ஆண்டில் ஐ.பி.எஸ்.அதிகாரியானவர். மிக நேர்மையான அதிகாரியான இவர் மத்திய சுங்கவரி ஆணையத்தின் தலைவர் பி.பி. வர்மா,மத்திய எக்ஸைஸ் வரித் துறையின் ஆணையர் சோமேஸ்வர் மிஸ்ரா ஆகியோர் கோடிக்கணக்கில் ஊழல்செய்தபோது அவர்களை உடனை கைது செய்து உள்ளே தள்ளியவர்.

நீரஜ் குமாரும் 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானவர் தான். இவர் இந்தியாவில் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைத்துள்ள நெட்வோர்க் குறித்து விசாரணை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை இடமாற்றம் செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு சி.பி.ஐ. இயக்குனர் பி.சி.சர்மா மத்திய அரசைநிர்பந்திப்பார் என்று தெரிகிறது. இப்போது இன்டர்போல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் கொழும்புசென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+