கண்ணகி சுடர் கருணாநிதியிடம் ஒப்படைப்பு
சென்னை:
சென்னை மெரீனாவிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரிகன்னியாகுமரியிலிருந்து கொண்டுவரப்பட்ட கண்ணகி சுடர் திமுக தலைவர் கருணாநிதியிடம்ஒப்படைக்கப்பட்டது.
கண்ணகி சிலையை அதே இடம், அதே நிலை மற்றும் அதே திசையில் நிறுவ வேண்டும் என்று வற்புறுத்திபன்னாட்டு தமிழுறவு மன்றம் உள்பட பல தமிழ் அமைப்புகள் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டன.
இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடன் கண்ணகி சுடரையும் ஏந்தி வந்தனர். திருநெல்வேலி,ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக நடை பயணம் மேற்கொண்ட அவர்கள் நேற்று(வியாழக்கிழமை) மாலை சென்னை வந்தடைந்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கவிஞர் வா.மு. சேதுராமன் தலைமையில் அவர்கள் அண்ணா அறிவாலயம் வந்து சேர்ந்தனர். அங்குகருணாநிதியைச் சந்தித்த அவர்கள் அவரிடம் கண்ணகி சுடரை ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications