2 பர்மா பஜார் வியாபாரிகள் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பர்மா பஜார் பகுதியில் கடை வைத்திருக்கும் 2 வியாபாரிகளை ரூ.5 லட்சம் பணயத் தொகை கேட்டு சிலர்கடத்திச் சென்றுவிட்டனர்.

பர்மா பஜார் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் ஜமால் மற்றும் பீர் முகம்மது. இருவரும் தண்டையார்பேட்டையில் உள்ள தங்களது வீட்டிலிருந்து கடந்த புதன்கிழமை காலை கடைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அன்று மாலையில் ஜமாலின் உறவினர் இப்ராகிம் என்பவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில்பேசியவர், ஜமால் மற்றும் பீர்கம்மது ஆகியோர் எங்களது பிடியில் உள்ளனர். உடனடியாக ரூ.5 லட்சம்கொடுத்தால் அவர்களை உயிருடன் மீட்டுச் செல்லலாம் என்று கூறினார்.

இதேபோன்ற தொலைபேசி அழைப்பு ஜமாலின் மனைவிக்கும் வந்துள்ளது. முதலில் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஜமாலின் குடும்பத்தினர் இரவு நெடுநிேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் ராதாகிருஷ்ணன்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

காணாமல் போன 2 வியாபாரிகளையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+