திமுகதான் எங்களுக்கு முதல் எதிரி: மார்க்சிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதால் திமுகதான் எங்களுடைய முதல் எதிரி என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் என். வரதராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.

புதிய செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரதராஜன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக அரசு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.

ரூ.4,500 கோடிக்கு வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்திய அதிமுக, ஆண்டிப்பட்டி தேர்தல் களத்திற்குச் சென்று,விலைகளை உயர்த்த மாட்டோம் என்று கூறிப் பிரச்சாரம் செய்தது.

தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்து நீதிமன்றத்துக்குப் போவதாகக் கூறியுள்ள திமுக, இதனால் மக்கள்பிரச்சனைகளைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கிவிடக் கூடாது.

எங்களைப் பொறுத்தவரை பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதால், அக்கட்சிதான் எங்களுக்குமுதல் எதிரியாகும். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு வெளியேற அக்கட்சி தயாரென்றால்,அதனுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள நாங்களும் தயார்தான்.

அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ராமர் கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை திமுகவும்அதிமுகவும் கண்டிக்காததை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தேசிய ஜனநாயக் கூட்டணியின் முக்கியக் கட்சியான பாஜகவின் ஆட்சி தொடர்பான சில கருத்துக்களில் அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா மெளனம் சாதிப்பது, எதிர்காலத்தில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் அதிமுகவின் திட்டத்தையே வெளிப்படுத்துகிறது.

மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கவுள்ள 3வது அணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமாகா ஆகிய கட்சிகளும்இடம்பெறவுள்ளன. ஆனால் காங்கிரசை எங்கள் 3வது அணியில் சேர்க்க மாட்டோம்.

முக்கியச் சாலைகள், தெருக்களில் அரசியல் பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம்விதித்துள்ள தடையை நீக்குவதற்காக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் காவிரிப் பிரச்சனைவிஷயத்தில் பாரபட்சம் இன்றி மத்திய அரசு நியாயம் வழங்க வேண்டும் என்றும் வரதராஜன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+