வவுனியா சென்றார் ரணில்: போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்

Subscribe to Oneindia Tamil

வவுனியா:

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு இலங்கைப் பகுதிக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேநிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழி வகுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நார்வே அமைதித் தூதரிடம்வழங்கினார்.

இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் ரணில் விக்கிரமசிங்கே வவுனியா வந்தார். அவருடன் பாதுகாப்புத்துறைஅமைச்சர் திலக் மரபனே, மற்றும் முப்படைகளின் தளபதிகளும் அதே ஹெலிகாப்டரில் உடன் வந்தனர்.

வவுனியாவில் தரையிறங்கிய அவர் அங்கிருந்த ராணுவத்தினர் மற்றும் தமிழர்களுடனும் கை குலுக்கினார். அவரதுவருகையையொட்டி இந்தப் பகுதிகளில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காரில் ஓமந்தை சென்ற ரணில்:

பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஓமந்தை என்ற இடத்துக்கு வந்தார். இந்த இடத்தில் ராணுவத்தின் கட்டுப்பாடுமுடிந்து புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி துவங்குகிறது. இங்கிருந்த பொது மக்களிடமும் ரணில்வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

நேற்று தான் இரு தரப்பினரும் நார்வே நாடு உருவாக்கிய நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்அளித்தனர். இன்று அரசின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரணில். இந்த ஒப்பந்ததை நார்வேநாட்டு அமைதித் தூதர் ஜான் வெட்ஸ்பெர்கிடம் வவுனியாவில் வைத்து விக்கிரமசிங்கே வழங்கினார்.

இலங்கை அமைதி முயற்சிகளில் இது மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவரும் இனப் போர் இதன் மூலம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. இதனால் அமைதியான பேச்சுவார்த்தை மூலம்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வழி ஏற்படும்.

பிரபாகரனே கையெழுத்திட்டார்:

முன்னதாக கடந்த வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தில் புலிகளின் சார்பில் அதன் தலைவர் பிரபாகரனேகையெழுத்திட்டுள்ளார். இதில் புலிகள் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறிய விக்கிரமசிங்கே, அதில் பிரபாகரனேகையெழுத்திட்டாரா என்பது குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பேசிய அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேன் பீட்டர்சன், இந்தஒப்பந்தத்தில் பிரபாகரனே கையெழுத்திட்டுள்ளார். 23ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த நிரந்தர போர் நிறுத்தஒப்பந்தம் அமலுக்கு வரும் என்றும் அறிவித்தார்.

மேலும் இந்த ஒப்பந்தம் நார்வே அரசிடம் இருக்கும். இந்த ஒப்பந்ததின் விவரங்கள் விரைவில் வெளியுலகுக்குத்தெரியப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இந்த ஒப்பந்தத்துக்கு பிரபாகரனின் ஒப்புதலைப் பெற நார்வே தூதர் சிறப்பு விமானத்தில் வன்னி சென்று வந்தார்.அவரை கிளிநொச்சியில் வைத்து சந்தித்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இந்த ஒப்பந்தில்புலிகள் தலைவர் பிரபாகரனின் கையெழுத்தைப் பெற்று அவரிடம் தந்துள்ளார்.

இந்த நிரந்தர போர் நிறுத்தம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

35 லட்சம் தமிழர்கள் வசித்து வரும் வடக்கு இலங்கை பகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்த பிரதமரும்வந்ததில்லை. ரணில் தான் இங்கு வரும் முதல் பிரதமராவார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ரணில், இந்த ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ஆனால், கடல்வழியே ஆயுதங்கள் ஏதும் புலிகளுக்கு வருவதைத் தடுக்க கடற்படைக்கு முழு அதிகாரமும் உள்ளதைஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளோம். இதை ஏற்று தான் புலிகள் கையெழுத்திட்டுள்ளனர். போர் நிறுத்தம் அமலுக்குவந்த 8 வாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றார்.

ஒப்பந்தத்தில் உள்ளது என்ன?

இந்த ஒப்பந்தத்தின்படி இரு தரப்பினரும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையைஏற்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒப்பந்தம் கையெழுத்தான 30வது நாள், 60வதுநாள், 90வது நாளில் குறிப்பிட்ட சில விஷயங்களுக்குத் தீர்வு காண இரு தரப்பினருமே உடன்பட வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. இதனால் 3 கட்டமாக இந்த அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக வேறு விவரங்களைத் தர ரணில் மறுத்துவிட்டார்.

பிரதமரின் இந்தப் பயணம் இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படவும், தமிழர்கள் சம உரிமையுடன் வாழவும் வழிவகுக்கும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் கூறினார்.

சில வாரங்களுக்கு முன்பு தான் யாழ்பாண நெடுஞ்சாலையை இரு தரப்பினரும் திறந்தனர். 1999ம் ஆண்டில்யாழ்பாணத்தை ராணுவம் தாக்கியதில் இருந்து இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது.

1994ம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்காவுக்கும் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கையெழுத்தானது.ஆனால், சந்திரிகாவின் இரட்டை நிலையால் அந்த ஒப்பந்தம் குலைந்து போனது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+