தாம்பரத்தில் நடமாடுவது சிறுத்தையா? நரியா?
சென்னை:
தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி அருகே நடமாடுவது சிறுத்தை அல்ல, அது நரியாக இருக்கும் என்று வண்டலூர்உயிரியல் பூங்கா இயக்குநர் பி.சி. தியாகி கூறியுள்ளார்.
சென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவிலிருந்து சிறுத்தை தப்பி விட்டதாக சில வாரங்களுக்கு முன்பு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதுவரை தப்பியோடியதாகக் கூறப்படும் சிறுத்தை பிடிபடவில்லை.
சிறுத்தையைப் பிடிப்பதற்காக வண்டலூர் பூங்கா மற்றும் சுற்றுப்புறங்களில் பொறி வைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழப்பம் காரணமாக பூங்கா மூடப்பட்டுக் கிடக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் வண்டலூர் அருகே உள்ள தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி வளாகம் அருகே சமீபத்தில்கொல்லப்பட்ட நிலையில் ஒரு ஆடு கிடந்தது. இதையடுத்து வண்டலூர் பூங்காவிலிருந்து தப்பிய சிறுத்தைதான்அங்கு வந்திருக்கும் என்று பேச்சு எழுந்தது.
இதையடுத்து தாம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வன அதிகாரிகள் ஆடு அடித்துக் கொல்லப்பட்ட இடத்தைஆராய்ந்தார்கள். அங்கு கிடைத்த கால் தடயங்களை ஆராய்ந்து பார்த்தபோது அது சிறுத்தையின் கால் தடயம்அல்ல என்று தெரிய வந்தது.
இதையடுத்து அது நரியின் கால் தடயமாக இருக்கலாம் என்று வன அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுகுறித்துவண்டலூர் பூங்கா இயக்குநர் தியாகி கூறுகையில்,
இது சிறுத்தை அல்ல, நரியின் கால் தடயம் போலத் தெரிகிறது. எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை.
வண்டலூர் பகுதியில் நடமாடுவதாக கூறப்படும் சிறுத்தை என்கிற நரியை (?) பிடிக்க தொடர்ந்து நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த மிருகம் தென்பட்டால் அதை மயக்க ஊசி போட்டு பிடிக்க முயற்சிப்போம். தேவைப்பட்டால் சுட்டுப்பிடிக்கவும் ரெடியாக உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications