கோடிக்கணக்கில் மோசடி: தமிழக தொழிலதிபரைப் பிடிக்க இன்டர்போல் உதவி
சென்னை:
தமிழகத்தில் ரூ. 45 கோடி மோசடி செய்த தொழிலதிபர் ராஜரத்தினத்தைப் பிடிக்க இன்டர்போலின் உதவிநாடப்பட்டுள்ளது.
இப்போது அவர் லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பி.ஆர். அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த ராஜரத்தினம் சமீபத்தில் சினர்ஜி பைனான்ஸ் என்றநிறுவனத்தை வாங்கினார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு அவர் ரூ. 45 கோடிதந்திருக்க வேண்டும்.
ஆனால், அதைத் தராமல் ராஜரத்தினம் ஏமாற்றி வருகிறார். இதனால் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள்கவலையடைந்துள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களை அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கச்செய்யவதாகவும் உத்தரவாதம் அளித்திருந்தார்.
ஆனால், உறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் தராததால் இயக்குனர்களும் பிரச்சனையில்மாட்டியுள்ளனர். இந் நிலையில் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு 2 முதலீட்டார்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் இந்த வழக்குத் தொடர்பாக போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துவிளக்கம் அளிக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஜய்குமாருக்கு உத்தரவிட்டார். இதற்காகவிஜய்குமார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் ஆணையிட்டார்.
இதையடுத்து விஜயகுமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி தான் இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள்குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:
இது தொடர்பாக சி.பி.ஐக்கு ரெட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இன்டர்போல் மூலம் குற்றவாளியைப் பிடிக்கஇன்டர்போலின் உதவியைப் பெற்றுத் தருமாறு சி.பி.ஐயிடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக சி.பி.ஐயிடம் இந்தவழக்கு விசாரணை விவரம் முழுவதும் தரப்பட்டுள்ளது.
அவரது பாஸ்போர்ட் விவரமும் தரப்பட்டுள்ளது. மேலும் ராஜரத்தினத்தின் மனைவி பிரபா குறித்த விவரங்களும்அவரது பாஸ்போர்ட் விவரங்களும் திரப்பட்டுள்ளன. அவையும் சி.பி.ஐயிடம் தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications