மத்திய அரசுடன் தேவையற்ற மோதலை விரும்பவில்லை: ஜெ.
சென்னை:
மத்திய அரசுடன் தேவையற்ற மோதலை அதிமுக விரும்பவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) கூறினார்.
வரும் மார்ச் 2ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா, இன்று காலை ஆளுநர் ராம்மோகன்ராவைச் சந்தித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:
பிரச்சனையின் அடிப்படையில்தான் மத்திய அரசை நாங்கள் ஆதரிக்கிறோம். மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுஏற்படும்போது, அதைச் சுட்டிக் காட்ட நாங்கள் தவறியதில்லை.
மத்திய அரசுடன் எப்போதுமே நாங்கள் தேவையில்லாமல் மோதியது கிடையாது. இனியும் தேவையில்லாமல்அதனுடன் மோத மாட்டோம். நிதி நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் மத்திய அரசு உதவ வேண்டும்.
எதிர்க் கட்சிகளை அதிமுக உடைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோல பழிசுமத்தும் கீழ்த்தரமானஅரசியலை எதிர்க் கட்சிகள் விட்டுவிட வேண்டும்.
மேலும் தற்போதுள்ள நிதி நெருக்கடியை எதிர்க் கட்சிகள் மனதில் வைத்துக் கொண்டு, எங்களை எதிரிகளாகப்பார்க்காமல் அரசுக்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பைத் தர வேண்டும்.
மக்களே எங்களுக்குத் தெளிவான தீர்ப்பைத் தந்துள்ளபோது, எதிர்க் கட்சிகளும் அதிமுக அரசுக்குத் தங்களுடையஒத்துழைப்பைத் தர முன்வர வேண்டும்.
தமிழகத்தின் புதிய அமைச்சரவைப் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. யார் யாரெல்லாம் புதிய அமைச்சராகஉள்ளனர் என்பதை மார்ச் 2ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் சபாநாயகராகக் காளிமுத்துவே நீடிப்பார். அவரை மாற்றிவிட்டு அந்த இடத்தில் பன்னீர்செல்வத்தைஅமர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்றார் ஜெயலலிதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications