வழக்கை வாபஸ் பெற்ற ஜெ.
டெல்லி:
டான்சி மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளைத் தன் மேல் தொடர அனுமதியளித்த தமிழக முன்னாள் ஆளுநர்சென்னா ரெட்டியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அதிமுக பொதுச் செயலாளரும் மீண்டும்தமிழக முதல்வர் பதவியை ஏற்கவுள்ளவருமான ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை) வாபஸ் பெற்றுக்கொண்டார்.
கடந்த 1995ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவர் மீது டான்சி மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளைத்தொடர சென்னா ரெட்டியிடம் ஜனதா கட்சித் தலைவர் அனுமதி கேட்டிருந்தார்.
சென்னா ரெட்டியும் அதற்கு அனுமதி அளித்தார். இதையடுத்து சுவாமி தொடுத்த வழக்குகள்தான்ஜெயலலிதாவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளாக உருவெடுத்தன.
இதனால் சென்னா ரெட்டியை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன் மீது வழக்குதொடர்வதற்காக அனுமதி தருவதற்கு சென்னா ரெட்டிக்கு அதிகாரம் இல்லை என்று தன் மனுவில் ஜெயலலிதாகுறிப்பிட்டிருந்தார்.
அப்படியே ஆளுநருக்கு அதிகாரம் இருந்தாலும் தன்னுடைய அமைச்சரவையின் ஆலோசனையைக் கூடக்கேட்காமல் சென்னா ரெட்டி எப்படி தன் மீது வழக்கு தொடர அனுமதி தரலாம் என்றும் தன் மனுவில் ஜெயலலிதாகேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கிடையே இந்த 2 வழக்குகளிலும் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால்சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தற்போது இந்த 2 வழக்குகளிலுமிருந்து ஜெயலலிதாவிடுதலையாகிவிட்டார்.
இதையடுத்து சென்னா ரெட்டிக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள ஜெயலலிதாமுடிவெடுத்தார்.
அதன்படி ஜெயலலிதாவின் வழக்கறிஞரான வேணுகோபால் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள்விடுத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.பி. பரூச்சா, நீதிபதி ஆர்.சி. லஹோத்தி, நீதிபதி என். சந்தோஷ் ஹெக்டே,நீதிபதி ரூமா பால் மற்றும் நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோரடங்கிய பெஞ்ச் இன்று வேணுகோபாலிடம் சிலகேள்விகளைக் கேட்டபின்னர் வேணுகோபாலிடம் அந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிஅளித்தனர்.
டான்சி வழக்கு தொடர்பான ஒரு அப்பீல் வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் இருந்த போதிலும், ஜெயலலிதாஇந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள முடிவெடுத்தார் என்று வேணுகோபால் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications