ஹெலிகாப்டர் நொறுங்கி மக்களவை சபாநாயகர் பாலயோகி மரணம்
டெல்லி:
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 8 மணிக்கு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்துவிபத்துக்குள்ளானதில் மக்களவை சபாநாயகர் பாலயோகி உயிரிழந்தார்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்திலிருந்து தனியார் ஹெலிகாப்டரில் பாலயோகி சென்றுகொண்டிருந்தார்.
கிருஷ்ணா மாவட்டம் கைக்கலூர் அருகே அந்த ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று அதுநொறுங்கி ஒரு குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பாலயோகி, அவருடைய உதவியாளர் கே.எஸ். ராஜு, பாதுகாவலர் மற்றும் அந்த ஹெலிகாப்டரின்பைலட் ஆகியோர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு ரயில் மூலம் செகந்திராபாத்துக்குப் போவதாகத்தான் பாலயோகி திட்டமிட்டிருந்தார். ஆனால் விதிவேறுவிதமாக விளையாடியது. நேற்று அவர் இருந்த பிஸியில் அந்த ரயிலைப் பிடிக்க முடியவில்லை.
இதனால் இன்று காலை அவர் ஹெலிகாப்டரில் கிளம்பினார். அது நொறுங்கி விழுந்து அவருடைய உயிரையேபலி வாங்கிவிட்டது. இறந்தவர்களின் உடல்கள் எலுரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் சில அமைச்சர்கள் அந்தமருத்துவமனைக்கு விரைந்தனர்.
பின்னர் பாலயோகியின் உடல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாளைஉடல் தகனம் நடைபெற உள்ளது.
மேல்மருவத்தூர் பக்தர் பாலயோகி
இறந்து போன பாலயோகி ஒரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலுக்கு பாலயோகி அடிக்கடி சென்று வழிபடுவது வழக்கம்.
அதேபோல் ஒவ்வொரு முறை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரும் திருப்பதி மற்றும்மேல்மருவத்தூர் கோவில்களுக்குச் செல்வதையும் பாலயோகி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்தில் பாலயோகி பலியானதற்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், துணைஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள்இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாஜ்பாய், சோனியா காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் நாளை நடைபெறவுள்ள பாலயோகியின்இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்கள்.
மத்திய அமைச்சரவை இரங்கல்
இதற்கிடையே பாலயோகியின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
இன்று பிற்பகல் டெல்லியில் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அமைச்சர்கள்பாலயோகியை நினைவு கூர்ந்து இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications