இளம் சபாநாயகரை இந்தியா இழந்தது: பாலயோகிக்கு ஜெ. இரங்கல்
சென்னை:
ஹெலிகாப்டர் விபத்தில் மக்களவை சபாநாயகர் பாலயோகி இறந்ததன் மூலம் இளம் சபாநாயகர் ஒருவரைஇந்தியா இழந்துவிட்டது என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கட்சி வேறுபாகளின்றி பொறுமையுடன் மக்களவையில் செயல்பட்ட பாலயோகியின் இந்தத் திடீர் மரணத்தால்நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் அன்பையும் பெற்றவர் பாலயோகி.
பாலயோகியின் இழப்பின் மூலம் நாடு ஒரு இளம் சபாநாயகரை இழந்து தவிக்கிறது.
அவரை இழந்து தவிக்கும் பாலயோகியின் குடும்பத்தினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்களுக்கும்என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதாகுறிப்பிட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தமாகா தலைவர் வாசன்,எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், தமிழக மதச்சார்பற்ற ஜனதா தள செயலாளர் ஜி.கே. தாஸ், புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பல தலைவர்களும்பாலயோகியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக, ஆந்திர ஆளுநர்கள் இரங்கல்
இதற்கிடையே தமிழக மற்றும் ஆந்திர ஆளுநர்கள் ஆகியோரும் பாலயோகியின் மரணத்திற்கு இரங்கல்தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மட்டுமல்ல இந்த நாடே ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது என்று தமிழக ஆளுநர் பி.எஸ்.ராமமோகன் ராவ் தன்னுடைய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications