தங்கபாலுவை நீக்கக் கோரி இளங்கோவன் கோஷ்டி ரத்தக் கையெழுத்து
சென்னை:
இதுவரை திராவிடக் கட்சிகளில் மட்டுமே இருந்து வந்த ரத்தக் கையெழுத்து போன்ற நாகரீகமான செயல்கள்காங்கிரசுக்கும் பரவியுள்ளது.
அங்கு கட்சித் தலைவர் இளங்கோவனுடன் மோதி வரும் தங்கபாலுவை கட்சியிலிருந்து நீக்க கோரி காங்கிரஸ்தொண்டர்கள் 100 பேர் ரத்த கையெழுத்து போட்ட கோரிக்கை மனுவை மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப்முகர்ஜியிடம் கொடுத்துள்ளனர்.
சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகள் அதிமுகவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர். இவர்கள் சுயலாபத்துக்காக கட்சியையே ஜெயலலலிதாவிடம் அடகு வைப்பதாக இளங்கோவன் கூறி வருகிறார்.
குறிப்பாக தங்கபாலு, யசோதா ஆகியோர் அதிமுகவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் தங்கபாலுவை கட்சியிலிருந்து நீக்க மேலிடத்திடம் கோரிக்கை வைப்பேன் என்று இளங்கோவன்கூறியிருந்தார். அதே போல் டெல்லிக்கு சென்று சோனியாவையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலைகட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் சென்னைமாவட்ட காங்கிரஸ் தலைவர் புரசை கே.பெருமாள் தலைமையில் 100 பேர் ரத்த கையெழுத்து போட்ட கோரிக்கைமனுவை பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியின் தன்மானத்தையும்,பெருமையையும் மக்கள் மத்தியில் நிலை நிறுத்துவதற்கு கடுமையாக உழைத்து வருகிறார்.
தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். பல தரப்பு மக்களையும் சந்தித்து வருகிறார். இதானால்சமுதாயத்தின் பல்வேறு மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
ஆகவே மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகிய நானும், மாவட்டத்திலுள்ள தொண்டர்கள்அனைவரும் தலைவர் இளங்கோவனை முழு மனதுடன் ஆதரிக்கின்றோம்.
காங்கிரஸ் கட்சியின் பெருமையை குலைக்கும் வகையில் வெளிப்படையாக அறிக்கைகள், பேட்டிகள் கொடுக்கும்தங்கபாலு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரை கட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், மூத்த தலைவராகியநீங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
ரத்த வாடையுடன் தரப்பட்ட இந்த மனுவை வாங்கிய முகர்ஜி ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார். பின்னர்சுதாரித்துக் கொண்டு, மேலிடத்தில் பேசுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து உடனடியாகக் கிளம்பினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications