சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை வருமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் உச்சநீதிமன்றம் அமைப்பது என்ற முடிவிலிருந்து மத்தியஅரசு விலகக் கூடாது. மத்திய அரசை கட்டாயப்படுத்த, தமிழக அரசு வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டசபையில்இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தங்களது மாநிலத்திலும் உச்சநீதிமன்ற கிளையைக் கோரி வரும் மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் துணையையும்மாநில அரசு நாட வேண்டும்.
சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை ஆரம்பிப்பது என்ற முடிவிலிருந்து மத்திய அரசு விலகுவது போலத் தெரிகிறது. இது பொதுமக்கள்மற்றும் வழக்கறிஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications