சேப்பாக்கத்தில் கருணாநிதி அலுவலகம் திறந்தது ஏன்?
சென்னை:
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தொகுதி எம்.எல்.ஏவான திமுக தலைவர் கருணாநிதி அங்கு ஒரு அலுவலகத்தைத் திறந்துள்ளார்.
வாலாஜா சாலையில் அமைந்துள்ள அந்த அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி அவர் திறந்து வைத்தார். பின்னர் தொகுதியின் பல்வேறுஇடங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காக எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ரூ. 19 லட்சத்தை ஒதுக்கி செக்கில் கையெழுத்துப் போட்டார்.
பின்னர் சிறிது நேரம் அந்த அலுவலகத்தில் அமர்ந்திருந்த கருணாநிதியின் காலில் விழுந்து திமுக மகளிரணியினர் ஆசி பெற்றனர்.
சட்டமன்றத்துக்கு வராமல் தன்னைத் தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் தொகுதி மக்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார் என்று அதிமுக கூறிவருகிறது.
ஆனால், சட்டமன்றத்துக்கு வராவிட்டாலும் கூட எனது தொகுதிக்குரிய பணிகளை நான் ஒழுங்காக செய்கிறேன் என்று கூறி அந்தக்குற்றச்சாட்டை கவுண்டர் செய்யும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மேலும் சட்டமன்றத்துக்கு வராமல் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படிநடக்கும்பட்தத்தில் சட்டமன்றம் நடக்கும் நாட்களில் இந்த அலுவலகத்தில் வந்து அமர்ந்து தனது பணிகளைக் கவனிப்பார் கருணாநிதி.
சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின், சைதை கிட்டு, ரகுமான்கான் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications