சட்டசபை இன்று கூடுகிறது: பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் சனிக்கிழமை காலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு சட்டசபை கூடுகிறது. இந்த ஆறு மாத காலத்தில் பன்னீர் செல்வம் முதல்வராகஇருந்தார். அவர் முதல்வர் பதவி வகித்தபோது ஒரு முறை கூட சட்டசபை கூட்டப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ராம் மோகன் ராவ் அரசின் திட்டங்களைக் கொண்ட அறிக்கையை வாசித்து சட்டசபைக் கூட்டத் தொடரைதுவக்கி வைக்கிறார். அதன் பிறகு கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
பிறகு திங்கள்கிழமை 11ம் தேதி சபை மீண்டும் கூடும். அப்போது ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கும்.
இந்த முறை சட்டசபை கூடும்போது சபையில் வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது. திமுக கூட்டணியில் இதுவரைஇடம் பெற்றிருந்த பல தோழமைக் கட்சிகள் ( விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம்)இப்போது அவர்களுடன் இல்லை.
அதேபோல, அதிமுக கூட்டணியில் இதுவரை இடம் பெற்றிருந்த தோழமைக் கட்சிகளும் (இரு கம்யூனிஸ்ட்கட்சிகள், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ்) அவர்களுடன் இப்போது இல்லை.
மேலும், எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அவர்களில் ஆஸ்டின் அதிமுகவில் சேர்ந்துவிட்டார். மற்றவரான அரசன் பாஜகவில் சேர்ந்து விட்டதால் தன்னையும் பா.ஜ.க. உறுப்பினர்களோடு அமர வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, சபையில் எம்.ஜி.ஆர். அதிமுகவே இனி இருக்காது.
கடந்த ஆளுநர் உரையை திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இந்த முறை என்ன செய்யப் போகிறார்கள்என்பது தெரியவில்லை.
அன்பழகனுக்கு முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவின்போது 6-வது வரிசையில் இடம் கொடுத்தது, மதுரைஅருகே தீவிரவாதிகள் தப்பிய சம்பவம், நிதி நெருக்கடி, பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்குறித்து சட்டசபையில் சூடான விவாதங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஆன பிறகு முதல் முறையாக ஜெயலலிதா சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முதல்வராகஇருந்தபோது சட்டசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாக்கியத்தை இழந்த பன்னீர் செல்வம் இப்போதுபதவியை ராஜினாமா செய்த பிறகு சாதாரண அமைச்சராகவே சட்டசபைக் கூட்டத்தில் பங்கு பெறுகிறார் என்பதுமுக்கியமான அம்சமாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications