அயோத்தி: ராணுவ உதவி கேட்கிறது மாநில அரசு
டெல்லி:
அயோத்தியில் பாதுகாப்புக்காக ராணுவத்தை நிறுத்துமாறு மத்திய அரசிடம் உத்தரப் பிரதேச அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
காஞ்சி சங்கராச்சாரியாரின் சமரசத் திட்டத்தின்படி அயோத்தியில் வரும் 15ம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் பூமிபூஜை நடத்தவுள்ளது. ஆனால், அந்த இடத்தில் கோவில் கட்டும் பணியை உடனே ஆரம்பிக்கக் கூடாது என்றுகூறப்பட்டுள்ளது. முஸ்லீம் அமைப்புகள் ஒப்புதல் தந்த பின்னர் தான் இந்த பூமி பூஜையை நடத்தலாம் என்றும்வி.எச்.பியிடம் சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
பிரச்சனைக்கு அப்பாற்பட்ட நிலத்தி தான் இந்த பூஜை நடக்கும். இதற்கு அனுமதி தர வேண்டும் என முஸ்லீம்அமைப்புகளிடமும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
இந் நிலையில் பூமி பூஜை என்று சொல்லிவிட்டு பிரச்சனைக்குள்ளான பகுதிக்குள் நுழைந்து வி.எச்.பி. அமைப்பினர்ஏதாவது செய்வார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் பரவியுள்ளது.
இந்தப் பூஜையில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் கூடி வருவதால் பாபர்மசூதியை இடித்தது போல ஏதாவது சம்பவம் நடந்துவிடலாம் என்ற பயமும் பரவி வருகிறது.
இதனால் வி.எச்.பி. நம்ப வேண்டாம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளே பிரதமர் வாஜ்பாய்க்குநெருக்குதல் தந்து வருகின்றன.
இந் நிலையில் அயோத்தியில் பூமி பூஜை நடத்த அனுமதித்தால் அங்கு ஏற்படும் எந்த நிலையையும் சமாளிக்கும்திறன் மாநில போலீசிடம் இல்லை. இதனால், அயோத்தியைப் பாதுகாக்கும் பணியை ராணுவத்திடம் ஒப்படைக்கமாநில அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி தான் நடந்து வருகிறது.
அம் மாநில ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அயோத்தியில்பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகவலை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில்,அயோத்தியை உள்ளடக்கிய பியாஸ்பாத் மாவட்டம் முழுவதும் ராணுவத்தை நிறுத்த அம் மாவட்ட ஆட்சியர்கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் பலமுறை தொலைபேசியில் அவர் மத்திய அரசைத் தொடர்பு கொண்டார்.கடந்த இரு நாட்களாக தனது கோரிக்கையை மிகவும் தீவிரமாக்கியுள்ளார்.
எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் இவ் விஷயத்தில் யோசித்துத் தான் முடிவு செய்ய முடியும். மாநிலஅரசின் கோரிக்கையை மத்திய அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்றார் பெர்னாண்டஸ்.
எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளைக் குறைத்துவிட்டீர்களாமே என்று நிருபர்கள் கேட்டபோது,
இது மிகத் தவறான செய்தி. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. பாகிஸ்தான் எல்லை முழுவதும் படைகள் முழுஅளவில் குவிக்கப்பட்டுள்ளன. நமது கோரிக்கைகளை பாகிஸ்தான் ஏற்கும்வரை படை வாபஸ் இருக்காது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications