கணவன் எதிரே பெண்ணைக் கற்பழித்த கும்பல்: 3 பேர் கைது
ஈரோடு:
ஈரோட்டில் கணவன் எதிரே பெண் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் உள்ள வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ராமன். அவரது மனைவி ஸ்ரீதேவி (20).இவர்கள் சம்பவத்தன்று மாலையில் வைராபாளையம் காவிரி ஆற்று படுகைக்கு குளிக்க சென்றனர்.
பிறகு இருவரும் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இந்த பெண்யார்? என்று கேட்டுள்ளது. இவள் என் மனைவி என்று ராமன் கூறியுள்ளார். இதன் பின்னர் ராமனை அந்தக் கும்பல்அடித்தது.
4 பேர் ராமனை பிடித்துக் கொள்ள, மற்ற 3 பேரும் ஸ்ரீதேவியை மாறி மாறி கற்பழித்துள்ளனர். உதவி கேட்டுஸ்ரீதேவி சத்தம் போடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். அதனால் அந்த 7 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
அதன் பிறகு ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவனைக்கு சென்று ஸ்ரீதேவி சிகிச்சை பெற்றுள்ளார். பிறகு ஈரோடுக்குவந்து கருங்கல்பாளையம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வைராபாளையத்தை சேர்ந்த முருகேசன் (31), குஞ்சப்பன்என்ற தமிழ்செல்வன் (27), கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த முருகன் (25) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தலைமறைவாகி இருக்கும் வைராபாளையத்தை சேர்ந்த கணேசன் (22), ரமேஷ் (27), சேட்டு,திருநகர் காலனியை சேர்ந்த தங்கராஜ் (18) ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications