சட்டசபைக்கு வந்துவிட்டு வெளிநடப்பு செய்த கருணாநிதி
சென்னை:
யாரும் எதிர்பாராத வகையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று திடீரென சட்டசபைக்கு வந்தார். அதே போலயாரும் எதிர்பாராத வகையில் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து சபையை விட்டு வெளிநடப்பு செய்தார்.
கடந்த மே மாதம் தேர்தல் நடந்து முடிந்து அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கருணாநிதி சட்டசபைக்கேவரவில்லை. தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.
மூன்று முறை தொடர்ந்து சட்டசபைக்கு வராவிட்டால் அவர் மீது பதவிப் பறிப்பு போன்ற நடவடிக்கைஎடுக்கப்படும் என சபாநாயகர் காளிமுத்து கூறியிருந்தார். கருணாநிதி சட்டசபைக்கு வரவேண்டும் என்றுவேண்டுகோளும் விடுத்திருந்தார்.
ஆனால், அவர் பதில் கடிதம் அனுப்பிய கருணாநிதி, தம்பி என்னைப் பற்றி ஜெயலலிதா வெளியில் வசைபாடிவருகிறார். இந் நிலையில் நான் சபைக்கு வந்தும் திட்டு வாங்க வேண்டும் என்பது தான் உங்கள் ஆசையா என்றுகேட்டிருதார்.
இந் நிலையில் இன்று தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. ஜெயலலிதா மீண்டும்முதல்வரானவுடன் நடக்கும் முதல் கூட்டம் இது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வரானவுடன் நடக்கும் முதல் கூட்டம் எனபதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கொஞ்சம்நீலம் அதிகமாகவே போட்ட வெள்ளை சட்டைகள், பளீர் வேட்டிகளுடன் வந்திருந்தனர். அவர்கள் முகமெல்லாம்மகிழ்ச்சி தாண்டவமாடியது.
10.30 மணி முதலே எம்.எல்.ஏக்கள் வந்து உட்கார ஆரம்பித்தனர். முதல்வர் ஜெயலலிதாவும் 10.50க்கு உள்ளேவந்தார். அதிமுக உறுப்பினர்கள் மொத்தமாய் எழுந்து நின்று அம்மா உட்கார்ந்த பின்னர் உட்கார்ந்தனர்.
இந் நிலையில் கருணாநிதி திடீரென சட்டசபைக்குள் வர அதிமுக எம்.எல்.ஏக்கள் முகங்களில் பரபரப்பு. நான் இதைஎதிர்பார்த்தேன் என்பதைப் போல உட்கார்ந்திருந்தார் ஜெயலலிதா.
நேராக சபாநாயகரைப் பார்த்து வணக்கம் தெரிவித்துவிட்டு எதிர்க் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளின்முதல் வரிசையில் அமர்ந்தார். அவரது வருகையை எதிர்பாராத திமுக உறுப்பினர்களே ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிஅடைந்தனர்.
சரியாக பதினோரு மணிக்கு ஆளுநர் ராம் மோகன் ராவ் வந்தார். அவரை சபாநாயகர் காளிமுத்து வரவேற்றுஅழைத்து வந்தார்.
அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் சபாநாயகர் தனது உரையைப்படிக்க ஆரம்பித்தார்.
அப்போது எழுந்து நின்ற எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன் தான் கையோடு கொண்டு வந்திருந்த பேப்பரில்எழுதியிருந்ததைப் படிக்க ஆரம்பித்தார். அவரை உட்காரச் சொல்லி அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
ஆனால், தொடர்ந்து படித்த அன்பழகன் ஆண்டிப்பட்டியில் ஆளும் கட்சியினர் முறைகேடு செய்து தேர்தலில்வென்றதாகவும், மக்கள் மீது ரூ. 4,200 கோடிக்கு வரி போட்டு வதைப்பதாகவும் கூறினார்.
இதனால் அரசைக் கண்டித்து வெளி நடப்பு செய்வதாகக் கூறிவிட்டு வெளியேறினார். அவருடன் கருணாநிதியும்,பிற திமுக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
அவர்கள் வெளியேறும் வரை அமைதியாக நின்றிருந்த ஆளுநர் தொடர்ந்து தனது உரையைப் படித்தார்.
முன்னதாக கருணாநிதி சட்டசபைக்கு வந்தபோது அவரை நிருபர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களிடம்சிரித்தவாரே பதிலளித்த கருணாநிதி, சட்டசபைக்கு வர திடீரென்று தான் முடிவெடுத்தேன் என்றார்.தொடர்ந்து வருவீர்களா எனக் கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறிவிட்டு அவைக்குள் சென்றார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications