அல்-உம்மா கைதிகளைக் கடத்திய தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்தது
மதுரை:
மதுரை அருகே திருமங்கலத்தில் போலீஸ் வேனை தாக்கி அதில் இருந்த அல்-உம்மா கைதிகளை மீட்டுச் சென்ற 6தீவிரவாதிகளின் அடையாளம் தெரிந்தது.
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு உள்பட பல வழக்குகளில் கைதான இமாம் அலி, ஹைதர் அலிஇருவரும் ஒரு வழக்குத் தொடர்பாக மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போது திருமங்கலம் போலீஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது போலீஸ் வேனைவெடிகுண்டுகளால் தாக்கியும், போலீசாரை துப்பாக்கிகளால் சுட்டும் வேனில் இருந்த இமாம் அலியையும் ஹைதர்அலியையும் 6 தீவிரவாதிகள் மீட்டுச் சென்றனர். இந்தக் கும்பல் ஒரு டாடா சுமோ காரில் தப்பியது. தாறுமாறாகச்சென்ற இந்தக் காரை அந்தப் பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த ஒரு போலீஸ் ஜீப் விரட்டிச் சென்றது.
அப்போது அந்த ஜீப் மீது தீவிரவாதிகள் சுட்டனர். இதில் அந்த ஜீப் சேதமடைந்தது. தொடர்ந்து அந்த ஜீப்பால்காரை விரட்ட முடியவில்லை. இதையடுத்து தொடர்நது சென்ற அந்தக் கார் கழிவு நீர் வாய்க்காலில் சிக்கியது.தீவிரவாதிகள் 8 பேரும் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இந்த காரில் இருந்து துப்பாக்கிகள், பட்டாக்கத்திகள், வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தப்பிய கைதிகளையும், கைதிகளை மீட்டுச் சென்ற 6 தீவிரவாதிகளையும் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாகஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார். பிற போலீசார் அந்தஇடத்திலேயே இல்லை. குற்றவாளிகளை வேனில் உட்கார வைத்துவிட்டு கதை அளக்கப் போயிருந்தனர். இதனால்தான் எளிதாக தீவிரவாதிகள் மீட்டுச் சென்றது அந்தக் கும்பல்.
இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷ்னர், தென்மண்டல ஐ.ஜி உள்பட 9 போலீசார் அதிரடி டிரான்ஸ்பர்செய்யப்பட்டுள்ளனர்
இந்நிலையில் 2 கைதிகளையும் மீட்டுச் சென்ற 6 தீவிரவாதிகளின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களின்விவரம் வருமாறு:
1. போலீஸ் பக்ரூதின்
2. இப்ராகிம்
3. செருப்பு கடை சையது
4. கூல்டிரிங்ஸ் சீனியப்பா என்கிற சைபுல்லா
5. நைனார்
6. பயாஸ்
இவர்கள் 6 பேரும் அல்-உம்மா தீவிரவாதிகள் தான் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்களில் போலீஸ் பக்ரூதின் என்பவன், தப்பிய கைதிகளில் ஒருவனான இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளிஎன்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவன் மீது கொலை வழக்குகளும் உள்ளன. கடத்தலுக்குப்பயன்படுத்தப்பட்ட டாடா சுமோவும் கூட இந்தக் கும்பலால் கடத்தி வரப்பட்டது தான் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தத் தீவிரவாதிகள் மதுரை வாழைத்தோப்பு, இஸ்மாயில்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்என்று தெரிகிறது. இதையடுத்து அந்தப் பகுதிகளில் பல வீடுகளிலும் போலீசார் நேற்று முதல் அதிரடி சோதனைநடத்தி வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது:
இந்த சோதனையில் இதுவரை 8 பேர் பிடிபட்டுள்ளனர். தப்பிய ஓடிய தீவிரவாதிகளுக்கும், இவர்களுக்கும்ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடத்தி வந்த வாடகைக் கார்:
கைதிகளை கடத்த தீவிரவாதிகள் பயன்படுத்திய டாடா சுமோ காரை, தீவிரவாதிகள் கடத்தி வந்துள்ளதும் போலீசார்விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் கார் விருதுநகரில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்தக்உரிமையாளரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் காரை மதுரையை சேர்ந்த ஹென்றி பீட்டர் என்பவருக்குவிற்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பீட்டரை விசாரித்தனர்.
அப்போது பீட்டர் அளித்த தகவல்:
மதுரையில் இருந்து பாளையங்கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று 6 பேர் காரை வாடகைக்கு பேசினர். காரைநானே ஓட்டிச் சென்றேன். திருமங்கலம் அருகே உள்ள கூத்தியாண்டு என்ற இடத்திற்கு சென்றதும் காரை நிறுத்தக்கூறினர். அங்கு என்னை அடித்துக் கீழே தள்ளி விட்டுவிட்டு காரை அவர்கள் நீங்களே விசாரணைக்குவந்துவிட்டீர்கள் என்றார்.
மீட்கப்பட்ட கைதிகளான இமாம் அலியும், ஹைதர் அலியும் மதுரையை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும்பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர்கள்.
மதுரையில் இருந்து பாளையங்கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று 6 பேர் காரை வாடகைக்கு பேசினர். காரைநானே ஓட்டிச் சென்றேன். திருமங்கலம் அருகே உள்ள கூத்தியாண்டு என்ற இடத்திற்கு சென்றதும் காரை நிறுத்தக்கூறினர். அங்கு என்னை அடித்துக் கீழே தள்ளி விட்டுவிட்டு காரை எடுத்துச் சென்று விட்டனர். என்னுடையவக்கீலுடன் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது நீங்களே விசாரணைக்கு வந்துவிட்டீர்கள்என்றார்.
கோவில்களை தகர்க்க முயன்றவர்கள்
மீட்கப்பட்ட கைதிகளான இமாம் அலியும், ஹைதர் அலியும் மதுரையை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும்பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் சென்று ஹிஸ்புல் முஹாஜிதீன் தீவிரவாத இயக்கத்திடம் பயிற்சி பெற்றவர்கள்.
இவர்கள் இருவரும் 1991ல் மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும்இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டவர்கள்.
மசூதி இடிப்பு சம்பவத்கை கண்டித்து திருவாதவூர் மற்றும் மேலூரில் உள்ள பல கோவில்களை குண்டு வெடித்துதகர்க்க முயன்றதாகவும் இவர்கள் கைதான பிறகு போலீசில் கூறியுள்ளனர்.
இது தவிர 1993ல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை, இந்த 2 பேரும் குண்டு வைத்துதகர்த்துள்ளனர். இதற்கான வழக்கு சென்னை தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
28 குண்டுத் துகள்கள் தாங்கிய காவலர்:
தீவிரவாதிகள் 2 கைதிகளை கடத்திச் சென்ற சம்பவத்தில் காவலர் கேசவன் மீது அநத்க் கும்பல் சரமாரியாக சுட்டதில்அவரது உடலில் 28 துப்பாக்கிக் குண்டு துகள்கள் பாய்ந்துள்ளன.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கேசவன். அல் உம்மா தீவிரவாதிகளை சென்னையிலிருந்து கோர்ட்விசாரணைக்காக மதுரை அழைத்துச் சென்ற போலீஸ் பாதுகாப்புப் படையில் இவரும் இடம் பெற்றிருந்தார்.
திருமங்கலத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவான கும்பல் திடீரென வந்து 2 தீவிரவாதிகளையும் மீட்டுச் சென்றசம்பவத்தின்போது கேசவன் சரமாரியான துப்பாக்கிக் குண்டு தாக்குதலுக்கு ஆளானார்.
அவரது உடலில் 28 துப்பாக்கிக் குண்டு துகள்கள் பாய்ந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை அரசுராஜாஜி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடலிலிருந்து இதுவரை 5 துப்பாக்கிக் குண்டுத் துகள்கள் அகற்றப்பட்டுள்ளன. மற்றவற்றை ஆபரேஷன்மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications