பெண் போலீஸிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்டு
பெரம்பலூர்:
பயிற்சி பெறும் பெண் போலீசிடம் சில்மிஷம் செய்ததாக ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் சஸ்பெண்டுசெய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் பெண் போலீசார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில்ஒரு பிரிவினர் சட்டம், ஒழுங்கு பயிற்சிக்காக பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் முகாமிட்டு பயிற்சிபெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட்ம ஆயுதப்படை போலீஸ் பிரிவில் டிரைவராக பணியாற்றி வருபவர் ஆறுமுகம். இவர்ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் பயிற்சி பெற்று வந்த, பெண்போலீஸ் மகேஸ்வரியிடம் சில்மிஷம் செய்ததாககூறப்படுகிறது.
இது தொடர்பாக மகேஸ்வரி ஆயுதப்படை போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த அதிகாரிஇருவரிடமும் விசாரணை நடத்தி அறிக்கையை எஸ்.பி.க்கு அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து எஸ்.பி. பன்னீர்செல்வம், போலீஸ் டிரைவர் ஆறுமுகத்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications