இமாம் அலி பெங்களூர் தப்பி விட்டானா?
மதுரை:
மதுரை அருகே மீட்டுச் செல்லப்பட்ட அல் உம்மா தீவிரவாதி இமாம் அலி பெங்களூர் அல்லது கேரளத்திற்குத்தப்பியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
மதுரை திருமங்கலம் அருகே ஹைதர் அலி மற்றும் இமாம் அலி ஆகிய இரு அல் உம்மா தீவிரவாதிகளும்அதிரடியாக சிலரால் மீட்டுச் செல்லப்பட்டனர்.
இவர்களில் ஹைதர் அலியை சிவகங்கையில் வைத்து போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். ஆனால்இமாம் அலி எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.
இமாம் அலியும், அவரை மீட்டுச் சென்ற கும்பலைச் சேர்ந்தவர்களும் பெங்களூர் அல்லது கேரள மாநிலத்திற்குத்தப்பியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து இரு இடங்களுக்கும் தனிப்படை போலீஸார்விரைந்துள்ளனர் என்று தெரிகிறது.
இதற்கிடையே இரு கைதிகளையும் மீட்டுச் சென்றவர்கள் குறித்த அடையாளம் ஹைதர் அலி மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. போலீஸிடம் சிக்கிய ஹைதர் அலி மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
இந்தக் கும்பலில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள். நைனார்முகம்மது, சீனி சுல்தான், பக்ருதீன், முகம்மது இப்ராகிம், சையத் இப்ராகிம் ஆகியோரே இவர்கள்.
இந்த 5 தீவிரவாதிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள போலீசார், இவர்களையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications