அரியலூர்-பெரம்பலூர் இணைப்பை எதிர்த்து கடையடைப்பு போராட்டம்
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டம் இணைக்கப்படும் என்று சட்டசபையில் நேற்று (சனிக்கிழமை)ஆளுநர் அறிவித்ததை எதிர்த்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.
அரியலூர் மக்களின் போராட்டத்திற்கு இணங்க கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி திமுகஆட்சியின்போது அரியலூர் மாவட்டம் தொடங்கப்பட்டது.
ஆனால் நேற்று நடந்த சட்டபைக் கூட்டத் தொடரில் நிதி நெருக்கடி காரணமாக பெரம்பலூர் மாவட்டத்துடன்அரியலூர் மாவட்டம் இணைக்கப்படும் என்று ஆளுநர் தனது உரையில் கூறினார்.
இதைக் கண்டித்து அரியாலூர் மாவட்டத்தில் நேற்று ஆட்டோக்கள், டாக்ஸிகள் எதுவும் ஓடவில்லை. அரியலூர்மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பேருந்துகள் மீது கல்லெறிச் சம்பவங்கள் நடந்தன.
இதைத் தொடர்ந்து அரியலூரில் நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் அரியலூர் மாவட்டத்தைதொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட அளவில் கடையடைப்பும் பந்த்தும் நடத்த முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடைகளுக்குமுன்னால் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. அரியலூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் எந்த பஸ்சும்ஓடவில்லை. ஆனால் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூருக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.
மேலும் நாளை அரியலூர் மாவட்டம் முழுவதும் பந்த் நடைபெறும் என்றும் தெரிகிறது. மாவட்டம் முழுவதும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து பிரித்து பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு 1995ல் மாவட்டத்தை தொடக்கியவர்ஜெயலலிதா. அதற்கு பிறகு அரியலூரை தனியாக பிரிக்க வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் கடந்த 2001ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கருணாநிதி. இந்நிலையில் மாவட்டத்தைஇணைக்க நடக்கும் முயற்சிக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications