மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக 63 மீனவர்களிடம் பணம் வாங்கி பல லட்சம் மோசடி செய்த 2 பேர்சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தில் டிராவல்ஸ் ஏஜன்சியை 3 பேர் நடத்தி வந்தனர். இவர்கள்இங்குள்ள மீனவர்களிடம் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 63 பேரிடம் தலா ரூ.40,000 வரை வசூல்செய்துள்ளனர்.

பிறகு இவர்களில் சிலருக்கு மலேசியாவில் வேலை தயாராக இருப்பதாக கூறி அவர்களை ஒரு வாரத்திற்குமுன்னால் சென்னைக்கு அழைத்து வந்து ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

பிறகு 3 பேரும் தலைமறைவாகிட்டனர். பிறகு தான் இவர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.இவர்கள் அனைவரும் சேர்ந்து கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மோசடிசெய்தவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஒருவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+