ஜெ.வுக்கு ஆளுநர் விருந்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆளுநர் ராமமோகன் ராவ் நேற்று(சனிக்கிழமை) மாலை விருந்தளித்தார்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் சனிக்கிழமை காலை நடந்தது. ஆளுநர் ராம் மோகன் ராவ் துவக்கஉரையாற்றினார். பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் ராமமோகன் ராவ் விருந்தளித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் ஜெயலலிதா, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் பி.சங்கர், உள்துறைச் செயலாளர்நரேஷ்குப்தா, முதல்வரின் செயலாளர் ராமகிருஷ்ணன், டிஜிபி நெய்ல்வால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications