கீழ்த்தர அரசியல் நடத்துகிறார் கருணாநிதி: ஜெ.
சென்னை:
கீழ்த்தரமான அரசியல் ஆதாயங்களுக்காக திட்டமிட்டே உண்ணாவிரத்ம் இருந்தார் கருணாநிதி என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சனிக்கிழமை காலை சேப்பாக்கத்தில் உள்ள கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுகண்ணாடிகள் உடைந்துள்ளன.
இதைக் கண்டித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு அந்த அலுவலகத்திலேயே கருணாநிதிஉண்ணாவிரதம் இருந்தார். உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவேதான் உண்ணாவிரதம் இருப்பதாக கருணாநிதி கூறினார்.
பிறகு வட சென்னை போலீஸ் இணை கமிஷனர் சைலேந்திரபாபு நேரில் வந்து, உண்மையான குற்றவாளிகளைப்பிடிப்பதாக உத்தரவளித்த பிறகே காலை 11 மணிக்கு கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இந்நிலையில் கருணாநிதியின் உண்ணாவிரதம் குறித்து ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசைக் குறைகூற வேண்டும் என்பதற்காகவே கருணாநிதி இவ்வாறு திட்டமிட்டு செய்துள்ளார்.இவருடைய எம்.எல்.ஏ. அலுவலகம் மட்டும் எப்படி தாக்கப்படும்?
கீழ்த்தரமான அரசியல் ஆதாயங்களுக்காகவும் விளம்பரத்திற்காகவும் தான் கருணாநிதி இவ்வாறு உண்ணாவிரதம்மேற்கொள்கிறார்.
அரசியலில் எவ்வளவோ ஆண்டுகள் அனுபவம் கொண்ட கருணாநிதி, ஏன் விளம்பரங்களுக்காக இந்தமாதிரியான கீழ்த்தரமான தந்திரங்களை எல்லாம் மேற்கொள்கிறார் என்று தெரியவில்லை.
இந்த மாதிரியான ஆரோக்கியமற்ற அரசியலை கருணாநிதி கைவிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications