அன்பழகன் மீது நடவடிக்கையா? - காளிமுத்து விளக்கம்
சென்னை:
சட்டசபை விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதற்காக சட்டசபை திமுக தலைவர் க.அன்பழகன் மீதுநடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் காளிமுத்துகூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர் சனிக்கிழமைஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரையாற்றத் தொடங்கும்போது, திமுக தலைவர் அன்பழகன் எழுந்து அறிக்கை ஒன்றை வாசித்தார்.அதற்கு மறுப்பு தெரிவிக்கப்படவே, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இது அவை விதிகளை மீறியது, ஆளுநரை அவமதிக்கும் செயல் என முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.கருணாநிதி தூண்டுதலின் பேரில் அன்பழகன் இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் அவை விதிகளை மீறியதாக அன்பழகன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அனைவருடனும்கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார். சட்டசபைக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
எதிர்க்கட்சித் தலைவர் அவை விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளார். ஆளுநர் உரை நிகழ்த்தும் போது பேசவோ,எழுந்து நிற்கவோ கூடாது என்று விதி உள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
இருப்பினும் அன்பழகன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இப்போது தெரிவிக்க இயலாது. அனைவருடனும்கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
பட்ஜெட் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 15ம் தேதிக்குப் பிறகு பட்ஜெட் தாக்கல்செய்யப்படலாம். எனது வேண்டுகோளையேற்று சபைக்கு வந்த கருணாநிதிக்கு நன்றி என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications