மறுபடியும் சட்டசபைக்கு வருவாரா கருணாநிதி?
சென்னை:
கருணாநிதியின் பதவி பறிபோகிவிடும் என்று சபாநாயகர் கூறியதால்தான் சட்டசபைக்கு கருணாநிதி வந்தார். இனிஅவர் வருவது சந்தேகமே என்ற செய்தி தற்போது உலா வருகிறது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டதில்பங்கேற்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி திடீரென சட்டசபைக்கு வந்தார்.
அவரை துரைருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் கைத்தாங்கலாக உள்ளே அழைத்து வந்தனர். அவைக்குள் வந்துஅமர்ந்த கருணாநிதி, திமுக உறுப்பினர்களிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்.
ஆளுநர் உள்ளே வந்து தனது உரையைத் தொடங்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் எழுந்து அறிக்கைஒன்றை வாசித்து விட்டு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து கருணாநிதியை மீண்டும் கைத்தாங்கலாக திமுக உறுப்பினர்கள் வெளியே அழைத்துச் சென்றனர்.கருணாநிதி சட்டசபைக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு வந்தார் என்ற பெரிய செய்தி, வெளிநடப்பு என்ற செய்தியால்அடிபட்டுப் போய் விட்டது.
கருணாநிதியால்தான் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். அன்பழகன் தானாக இந்த முடிவைஎடுத்திருக்க மாட்டார் என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக புகார் கூறியுள்ளார்.
ஒரு நிமிடத்திற்கு மேல் என்னை முதல்வர் நாற்காலியில் பார்க்க கருணாநிதியால் முடியவில்லை என்றும்ஜெயலலிதா கடுமையாக கருணாநிதியை விமர்சித்துள்ளார்.
சட்டசபைக்கு வராமல் இருந்ததற்காக பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த கருணாநிதி, சபைக்கு வந்தும் கூடஇப்படி விமர்சனத்தை சந்திருக்கிறார். இதை அவர் தவிர்த்திருக்கலாம் என்றே பல அரசியல் கட்சித் தலைவர்கள்கருதுகிறார்கள்.
ஆளுநர் உரையை திமுக புறக்கணிக்காமல் இருந்திருக்கலாம் என்று பல்வேறு கட்சியினரும் கருதுகிறார்கள்.பொதுமக்கள் தரப்பிலும் ஆளுநர் உரையைப் புறக்கணிப்பதன் மூலம் திமுகவுக்கு என்ன கிடைத்து விட்டது என்றுகேட்கிறார்கள்.
தற்போதைய வெளிநடப்பின் மூலம் திமுகவுக்கு கெட்ட பெயர்தான் கிடைத்துள்ளது. கடந்த முறையும்இப்படித்தான் ஆளுநர் உரையை திமுக தலைவர் கருணாநிதி கைதைக் காரணம் காட்டிப் புறக்கணித்தார்கள்.
இப்போது ஒரு காரணத்தைக் கூறியுள்ளார்கள். இப்படி அடிக்கடி வெளிநடப்புச் செய்தால், அதிமுக அரசின்குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய பொறுப்பிலிருந்து திமுக தவறுவதாகபொதுமக்கள் மத்தியில் எண்ணம் ஏற்பட்டுள்ளது.
வெறுமனே சட்டசபைக்கு வந்து உட்கார்ந்து விட்டுச் செல்வது சாதாரண உறுப்பினர்களுக்கு வேண்டுமானால்சம்பிரதாயமாக இருக்கலாம். ஆனால் கருணாநிதி போன்ற மூத்த தலைவர்கள், ஜனநாயகத்தை மதிப்பவர்கள்,பார்மாலிட்டிக்காக சபைக்கு வந்து செல்வது சரியா, அழகா என்று பொதுமக்கள் மத்தியில் அதிருப்திஏற்பட்டுள்ளது.
பதவி பறி போய் விடும் என்று சபாநாயகர் மிரட்டிய காரணத்தால்தான் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வது போலவந்து விட்டு கையெழுத்துப் போட்டு விட்டு கருணாநிதி சென்று விட்டார். இனிமேல் மறுபடியும் அவர் சபைக்குவர மாட்டார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
சேப்பாக்கம் தொகுதியில் மக்கள் குறை தீர்ப்பதற்காக எம.எல்.ஏ. அலுவலகத்தை கருணாநிதி திறந்து வைத்தபோது,பொதுமக்கள் மத்தியில் சந்தோஷ உணர்வு ஏற்பட்டது. மக்கள் பணியில் குதிக்க கருணாநிதி தயாராகி விட்டார்என்று மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் சட்டசபைக்கு வந்த வேகத்தில் அவர் திரும்பிச் சென்ற விதத்தைப் பார்த்து பொதுமக்கள் குழம்பிப் போய்உள்ளனர். ஒரு கையில் வெண்ணையும், மறு கையில் சுண்ணாம்பும் என்ற கதையாக இது உள்ளதே என்று அவர்கள்அங்கலாய்க்கிறார்கள்.
சட்டசபைக்கு வருவதையே பெரிய வெற்றியாக கருணாநதி நினைத்து விடக் கூடாது. விவாதங்களில் கலந்துகொண்டு, மூத்தவர், சிறந்த நிர்வாகி, அனுபவஸ்தவர் என்ற அடிப்படையில் அதிமுக அரசுக்கு கடிவாளம் போலகருணாநிதி செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் அவமானப்படுத்துவார்கள், தாறுமாறாக பேசுவார்கள் என்ற பயத்தைகருணாநிதி புறந்தள்ள வேண்டும். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவரான, மூத்த தமிழறிஞரானகருணாநிதியை அவமானப்படுத்துவதை சபாநாயகரும், முதல்வரும் நிச்சயம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
அவர்களையும் மீறி ஏதாவது அவமானம் நடந்தால் அதை தமிழ் கூறும் நல்லுலகம் பார்த்துக் கொண்டிருக்காதுஎன்பதால் சபைக்கு வருவதற்கு கருணாநிதி தயங்கக்கூடாது.
புதுமுக எம்.எல்.ஏ. போல வந்து,செல்லும் போக்கை கருணாநிதி கைவிட வேண்டும் என்ற பொதுவான கருத்தைகருணாநிதி மதித்துச் செயல்படுவார் என்று எதிர்பார்ப்போம்.
டெயில் பீஸ்: சேப்பாக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம்நேற்று திடீரென்று சில மர்ம மனிதர்களால் கல் வீசித் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று அங்கு திடீர்உண்ணாவிரதம் இருந்த அவர், பின்னர் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications