கருணாநிதி உண்ணாவிரதம்: மதுரையிலும் எதிரொலி
மதுரை:
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த செய்தி மதுரையிலும் எதிரொலித்ததையடுத்து,அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னை-சேப்பாக்கத்தில் உள்ள கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம் நேற்று சில மர்ம மனிதர்களால்தாக்குதலுக்குள்ளானது. இதைக் கண்டித்து இன்று காலை கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறார் என்று கேள்விப்பட்ட மதுரை திமுக தொண்டர்கள் பரபரப்படைந்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை மாநகர முன்னாள் மேயர் குழந்தைவேலு, பொன் முத்துராமலிங்கம், மு.க. அழகிரிஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைஅருகே திரண்டனர்.
பின்னர் தேவர் சிலையின் அருகிலேயே தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் மற்றும் மறியல் போராட்டத்தில்திமுகவினர் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து சமாதானப்படுத்தியும் அவர்கள் தங்கள்போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.
பின்னர் சென்னையில் கருணாநிதி தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட செய்தியைக்கேள்விப்பட்டதும், இங்கிருந்த திமுகவினரும் தங்களுடைய மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தைக்கைவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் அமைதியாகக் கலைந்து சென்ற பிறகுதான் போலீசார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications