கவர்னர் உரை: முக்கிய அம்சங்கள்
சென்னை:
தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றுவதற்காக 15 அம்சத் திட்டத்தை தமிழக அரசுஅறிமுகப்படுத்தவுள்ளதாக சட்டசபையில் தன்னுடைய உரையின்போது ஆளுநர் ராமமோகன் ராவ் நேற்று(சனிக்கிழமை) கூறினார்.
ஒவ்வொரு துறையிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை விளங்கச் செய்வதாக தமிழக முதல்வர்ஜெயலலிதா அறிவுத்துள்ளதைச் சுட்டிக் காட்டிய ராவ், இதற்கான 15 அம்சத் திட்டங்களையும் வெளியிட்டார்.அதன் விவரம்:
பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டம் இணைப்பு
பெரம்பலூரிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டம், மீண்டும் அதே மாவட்டத்துடனேயே இணைக்கப்படவுள்ளது. அரசின் செலவைக்குறைக்கவும் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் இந்த 2 மாவட்டங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிவிரைவு தொழில்நுட்ப முன்னேற்றம்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் தொடர்பான வளர்ச்சிகளை ஊக்குவிக்க அனைத்து விதமானமுயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
எழுத்தறிவு முன்னேற்றம்
ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வியின் தரம் உயர்த்தப்படும். மேலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தனிக்கவனம் செலுத்தப்படும்.
உணவுப் பாதுகாப்பு
ஆண், பெண் மற்றும் குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் சரிவிகித உணவு கிடைப்பதற்கான பொருளாதார மற்றும் சமூக வழிமுறைகள்உருவாக்கப்படும்.
கால்நடைப் பாதுகாப்பு
கால்நடைகளின் தரத்தை மேம்படுத்தி அவற்றை நன்றாகப் பேணுதல், பண்ணைகளின் துணை வருவாயைப் பெருக்குதல், மீன்வளர்ப்பை மேம்படுத்தி மீன் வளத்தைஅதிகரித்தல் ஆகியவை செயல்படுத்தப்படும்.
இவை தவிர தொடர் பசுமைப் புரட்சி, நீர்வளப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்பு, உறைவிடப் பாதுகாப்பு, உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, நாட்டுப்புறக் கலைக்குப் புத்துயிர் அளிப்பது, பாலின நேர்மை நெறி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புதிய அணுகுமுறை,வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி ஆகியவையும் மேம்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications