மதுரையில் தப்பிய அல்-உம்மா கைதி சிவகங்கையில் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திருமங்கலத்தில் போலீசாரை தாக்கி விட்டு மீட்டு செல்லப்பட்ட அல்-உம்மா தீவிரவாதிகள் இருவரில் ஹைதர் அலிஎன்பவனை சிவகங்கையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து பாளையங்கோட்டைக்கு ஒரு வழக்கு விஷயமாக கடந்த 7ம் தேதி அல்-உம்மாதீவிரவாதிகளான இமாம் அலி, ஹைதர் அலி இருவரையும் போலீசார் கொண்டு சென்றனர்.

திருமங்கலம் காவல் நிலையம் அருகே போலீஸ் வேன் நின்றிருந்த போது, டாடா சுமோ காரில் வந்த 5 பேர்கொண்ட கும்பல் ஒன்று வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் இருவரையும் மீட்டு சென்றது.

இவர்கள் இருவரையும் பிடிப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையிலும், விசாரணையிலும்ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஹைதர் அலி தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரம் பகுதியில் இருந்து ஒருகாரில் சிவகங்கைக்கு வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர். சரியாக சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு மன்னர்துரைசிங்கம் கல்லூரி அருகே காரை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர்.

காரில் இருந்த ஹைதர் அலி வேகமாக கீழே குதித்து தப்பி ஓட முயன்றான். ஆனால் போலீசார் அவனைவளைப்பிடித்து கைது செய்தனர். காரில் அவனுடன் அவன் தந்தையும், தங்கையும் வேறு சில நபர்களும்இருந்தனர்.

பிடிபட்ட போது அவன் தாடியை ஷேவ் செய்து அடையாளத்தை மாற்றியிருந்தான். பின்னர் போலீஸின்பாதுகாப்புடன் ஹைதர் அலி மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+