ராஜ்ய சபா எம்.பி. தேர்தல்: நாளை வாசன் வேட்புமனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராஜ்ய சபா எம்.பி. தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நாளை(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பிக்களுக்கான பதவிக் காலம் முடிவடையவிருப்பதால், அப்பதவிகளுக்கு வரும்27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இவற்றில் 4 இடங்கள் அதிமுகவுக்கும் மீதமுள்ள 2 இடங்கள் திமுகவுக்கும் தமாகாவுக்கும் கிடைப்பதற்கானவாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் தமாகாவின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமாகா சார்பில் ராஜ்யசபா எம்.பிக்கான வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக வாசன்தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பெயரை எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் முன்மொழிய, மற்ற முக்கியதலைவர்கள் வழிமொழிந்தனர்.
இதையடுத்து நாளை தன்னுடைய வேட்புமனுவை வாசன் தாக்கல் செய்யவுள்ளார்.












Click it and Unblock the Notifications