சேலம் அருகே சாலை விபத்தில் 14 பேர் பலி
சென்னை:
சேலம் அருகே மேச்சேரி என்ற இடத்தில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சேலத்திலிருந்து மேட்டூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல, சேலம் நோக்கி ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
இரு பஸ்களும் மேச்சேரி அருகே ஒரு பாலத்தில் வேகமாக வந்தபோது பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 25 பேருக்கு மேல் பலத்தகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சேலம், மேட்டூர், ஓமலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
இந்த விபத்து காரணமாக சேலம்-ஓமலூர் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும்,விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 வழங்கவும்உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications